FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 27, 2016, 08:44:32 PM
-
சப்ஜா பால்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fds-1.jpg&hash=0f44ee5a29e037c8d4f4ae142e18e81efe713aa5)
தேவையான பொருட்கள்
(இது நான்கு நபர்களுக்கு போதுமானது)
சப்ஜா விதை–2 தேக்கரண்டி
பாதாம் பிசின்–100 கிராம்
பால்–500 மி.லி.
ரோஜா குல்கந்து–4 தேக்கரண்டி
செய்முறை:
* பாதாம் பிசினை 300 மி.லி. நீரில் ஐந்து மணி நேரம் ஊறவையுங்கள்.
* சப்ஜா விதையை 20 நிமிடம் ஊற வையுங்கள்.
* பாலை நன்கு காய்ச்சி, அத்துடன் ஊற வைத்துள்ள பாதாம் பிசின், சப்ஜா விதையை சேருங்கள். * குல்கந்தையும் கலந்து பரிமாறுங்கள்.
* இது சத்தான, சுவையான பானம். கோடை காலத்தில் குழந்தைகளுக்கும் ஏற்றது. சிறுநீர் எரிச்சல் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படு தலையும் குணப்படுத்தும்.