FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 26, 2016, 07:48:31 PM
-
கேரட் & முட்டை பொரியல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2FDSC_6743.jpg&hash=512d1e32c03f414f867612308511d71ac188fce0)
தேவையான பொருட்கள்:
கேரட்_1
சின்ன வெங்காயம்_2
பச்சை மிளகாய்_1
மஞ்சள் தூள்_சிறிது
முட்டை_1
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
கேரட் பொரியலில் கேரட் வெந்ததும் தேங்காய்ப்பூ அல்லது வெந்த பருப்பு சேர்ப்போம்.அதற்கு பதிலாக இதில் முட்டையை ஊற்றி செய்கிறோம். அவ்வளவே.
வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டை கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு கேரட்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.
இரண்டும் சேர்ந்தார்போல் வந்ததும் இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்