FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 25, 2016, 11:56:38 PM
-
வெள்ளரிக்காய் பச்சடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Ffree-1.jpg&hash=45d7467a964d17716e09600565aadfc8e28a4276)
தேவையான பொருட்கள்:
வெள்ளரி – 1 கப் (சிறிய துண்டுகளாக வெட்டவும்)
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 3/4 கப்
தயிர் – 2 மேஜைக்கரண்டி
பூண்டு – 2
அரைக்க:
தேங்காய் துருவல் – 1/4 கப்
சோம்பு – 1
சீரகம் தூள் – 1/2 டீஸ்பூன்
சமைக்கும் முடிவு:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 5
செய்முறை:
அரைக்க வேண்டிய பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
கடாயில் நறுக்கிய வெள்ளரிக் காயை எடுத்துக் கொள்ளவும்.தண்ணீர் சேர்க்கவும்
உப்பு சேர்க்கவும்
ஒரு பாத்திரத்தால் மூடி வேக வைக்கவும்
வெள்ளரிக்காய் வெந்ததும் அதனுடன் அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்க வைக்கவும்
பின்பு தீயை அணைக்கவும்
பின்பு தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
பின்பு அதனை பச்சடியுடன் சேர்த்து கலக்கவும்
பின்பு பரிமாறவும்