FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 25, 2016, 10:53:48 PM
-
கத்திரிக்காய் பொடி கறி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fbrinjol-e1452179519175.jpg&hash=4eedc5987da7c948efc81dfab0e83fec8313b2ca)
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 1/2 கிலோ
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பொடி செய்ய தேவையான பொருட்கள்
முழு உளுத்தம்பருப்பு – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 5
செய்முறை:
கத்திரிக்காயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறிய தீயில் நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள பொருட்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
கத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும், பின் மூடி போட்டு மிதமான சூட்டில் கத்திரிக்காயை நன்கு வேக வைக்கவும்.
கடைசியாக பொடி சேர்த்து நன்கு கிளறி சாதம், சாம்பாருடன் சேர்த்துப் பரிமாறவும்.