FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 25, 2016, 10:45:45 PM
-
வாழைக்காய் சிப்ஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2F8834171113-IMG_1463.jpg&hash=3e95c95aecebb6cb69fafe71579099b0eaa4e9ff)
வாழைக்காய் – 2 (தோல் சீவி வைக்கவும்),
மஞ்சள்தூள் – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக கடாயில் சிப்ஸ்களாக சீவவும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வெள்ளையாக… அதே சமயம், மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காயை சீவும்போது அடுப்பை சிறு தீயிலும், பின்பு அதிகமாவும் வைத்து வறுத்தெடுக்க வேண்டும். ஒரு கப்பில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி வைக்கவும் (விருப்பப்பட்டால் சிறிதளவு கறுப்பு உப்பு, சாட் மசாலாவை சேர்க்கலாம்). ஒவ்வொரு முறை சிப்ஸ் வறுத்தெடுக்கும்போதும் இந்தப் பொடியை தூவவும். கடைசியாக கறிவேப்பிலை வறுத்துப் போட்டு பரிமாறவும்.