FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 24, 2016, 06:46:33 PM
-
நான் உன்னைக் காதலிப்பதை
எங்கேயாவது எழுதிவைக்க வேண்டும்
கடற்கரை மணலில் எழுதி வைத்தால்
கடல் அலைகள் வந்து
அழித்திடக் கூடும்
காக்கைச் சிறகினில் எழுதி வைத்தால்
கரண்ட் கம்பத்தில் சிக்கி இறந்திடக் கூடும்
வானத்தில் எழுதி வைத்தால்
மேகங்கள் வந்து
மறைத்திடக் கூடும்
நிலவின் முகத்தில் எழுதி வைத்தால்
தேய் பிறையோடு
தேய்ந்திடக் கூடும்
கல்லில் எழுதி வைத்தால்
காலப் போக்கில்
கரைந்திடக் கூடும்
அதனால்
தமிழ் சொல்லின் மேல்
எழுதி வைக்கிறேன்
என் காதல்
காலத்தையும் வென்று வாழும்