FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 24, 2016, 09:01:04 AM

Title: ~ முகம் பளபளக்க புரூட் மசாஜ் ~
Post by: MysteRy on March 24, 2016, 09:01:04 AM
முகம் பளபளக்க புரூட் மசாஜ்

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10600570_934050450042819_1833606172821513191_n.jpg?oh=096d96cc0bdfbfe6c004dee4736e865b&oe=57853E9E)

பாலை உபயோகப்படுத்தி முகம் முழுவதும் பூசி மெதுவாக
பஞ்சைக் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்

மசாஜ் செய்ய தயிரை, தேனை உபயோகப்படுத்த வேண்டும்.
இது சூரியக்கதிர்களின் தாக்குதலால் ஏற்படும் சருமக்
கருப்பைப் போக்கும். அதிக சத்தும் சருமத்திற்கு கிடைக்கும்.

பப்பாளி விழுதைச் சேர்த்து வறண்ட மற்றும் சாதாரண
சருமத்தினர் மசாஜ் செய்ய உபயோகப்படுத்தலாம்.

தக்காளி, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் கலவையைக்
கொண்டு மசாஜ் செய்தால் முகம் மிகவும் பளபளப்புடன்
இருக்கும்.

பழுத்த வாழைப்பழத்தை கூழாக்கி ஒரு ஸ்பூன் தேன்
கலந்து முகத்தில் பூசினால் முகம் பொலிவாக
இருக்கும் இதனை அனைத்து சருமத்தினரும்
உபயோகப்படுத்தலாம்.

சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப்
பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில்
அழுத்தி தடவ வேண்டும்.

நீங்கள் ஏதேனும் மசாஜ் செய்து முடிந்தவுடன் சிறிய
டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்துபொறுக்கு
மளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று
நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு
இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்ய இயலாதவர்கள் சிறிய
பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க
வேண்டும் வேப்பிலைகள் சிறிது சேர்த்து ஆவி
பிடித்தால் மிகவும் நல்லது.

பேக் போட கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்
கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம்
பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றை அரைத்து
பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ
வேண்டும். மேற்கூறியவற்றில் ஏதாவது இரண்டு
அல்லது மூன்று சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக்
கொள்ளலாம். இந்த பேசியல் செய்த உடனேயே
கண்கள் குளிர்ச்சியடையும். முகம் பளபளப்பாகவும்
அழகாகவும், பொலிவுடனும் மாறும்.

ஸ்ட்ராபெரி பழம் சருமத்தை இலேசாக வெளுக்கச்
செய்யும் தன்மை கொண்டது.முகத்திலுள்ள பருக்களின்
வடுக்களை விரைவில் மறையச்செய்யும் குணம்
கொண்டது.

வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும்,
சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
இப்பழத்தைக் கொண்டு மசாஜ் செய்தால் முகத்தில் நல்ல
மாற்றம் காணலாம்