FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 24, 2016, 08:56:01 AM

Title: ~ உடலை புத்துணர்சியாக்கும் பிளம்ஸ் பழம் ~
Post by: MysteRy on March 24, 2016, 08:56:01 AM
உடலை புத்துணர்சியாக்கும் பிளம்ஸ் பழம்

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10670173_1548511805446289_1833227999826681036_n.jpg?oh=61d43471e4fe4dfb1c7d95499e954c05&oe=57899501)

ரத்தத்தை சுத்தப்படுத்த

ரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்த சுத்தத்திற்கு பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

ஜீரண சக்கியைத் தூண்ட

உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவானது நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

உடல் புத்துணர்ச்சிக்கு

உடலும் மனமும் சேர்வடையாமல் புத்துணர்சியுடன் இருக்க தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் அதிக சோர்வடைகிறது. இதனால் இளவயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக்கின்றனர். இந்த குறைகள் நீங்கி உடல் புத்துணர்வடைய பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம். பிளம்ஸ் பழத்தை உலர்த்தி காய வைத்தும் சாப்பிடலாம்.