FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 24, 2016, 08:51:01 AM
-
மசால் வடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fmaaaa-e1456234225816.jpg&hash=68c7c6cba3673c7b6ebbb8e3d17fde6fe9825a4f)
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 3
பச்சைமிளகாய் – 8
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 5 பல்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி – சிறிது
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
கடலைப் பருப்பை சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து சுத்தம் செய்து நீரை வடித்து உப்பு சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை மெல்லிய நீள வில்லைகளாகவும், பச்சைமிளகாயைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். சோம்பைத் தூள் செய்யவும்.
மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
மாவை எலுமிச்சங்காய் அளவு சிறு சிறு உருண்டைகளாகச் செய்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு உருண்டையை எடுத்து அழுத்தி அதில் விடவும்.
ஒரு பக்கம் சிவந்து வந்ததும் திருப்பி விட்டு மறுபக்கமும் சிவந்து வந்ததும் எடுத்து எண்ணையை வடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.