FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 24, 2016, 08:41:38 AM
-
சோளா பூரி
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/1915652_1548850392079097_4371531779671088962_n.jpg?oh=9b2b5bd4533072acd361f098216ea97b&oe=57977F8B)
தேவையானப்பொருட்கள்
மைதா மாவு – ஒரு கப்
கோதுமை மாவு – ஒரு கப்
ரவா – அரை கப்
தயிர் – கால் கப்
உப்பு – முக்கால் தேக்கரண்டி
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
மாவு நன்கு ஊறியதும் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து சப்பாத்திக் கட்டையில் வைத்து சற்று பெரியதாக தேய்க்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரியைப் போட்டு பொரிக்கவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.
சுவையான சோளா பூரி தயார். சன்னா மசாலாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்