FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 24, 2016, 08:33:30 AM
-
பாலக்கீரை சீஸ் மேக்ரோனி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Faq.jpg&hash=15d38c1a6a82d30849f8c051daaf89983814455a)
தேவையான பொருட்கள்
நறுக்கிய பாலக்கீரை – 1/2 கப்,
சங்கு போல் இருக்கும் மேக்ரோனி – 100 கிராம்(வேக வைத்தது)
சீஸ் – 2 துண்டுகள்
உப்பு, மிளகு தூள் – தேவைக்கேற்ப
சீரகம் – சிறிதளவு
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
*வெண்ணெயைக் காய்ச்சி சீரகம் தாளிக்கவும்.
*அதனுடன் பாலக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.
*மேக்ரோனி சேர்த்து நன்கு புரட்டி உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
*அத்துடன் பச்சை மிளகாயை சிறிது நேரம் வதக்கி, கிளறிக் கலந்து, மேலே துருவிய சீஸ் சேர்க்கவும்.
* இப்போது சுவையான பாலக்கீரை சீஸ் மேக்ரோனி ரெடி!! இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.மிகவும் சத்தானதும் கூட!!!!
குறிப்பு: சிறுவர், சிறுமியருக்கும் பாலக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.