FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 24, 2016, 08:29:11 AM
-
பேபிகார்ன் பக்கோடா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2F-%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AE%25BE-e1458318255335.jpg&hash=7f180de8f88358bbcd08a3874c85a1b3875b6a17)
தேவையானவை:
பேபிகார்ன் துண்டுகள் – ஒரு கப்
கடலைமாவு – ஒரு கப்
அரிசிமாவு -2 ஸ்பூன்
சோளமாவு – அரை கப்
பெரிய வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 6
புதினா இலை 10
சோம்பு – 2 ஸ்பூன்
டால்டா -2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு
எண்ணெய் – 2 கப்.
பேபிகார்ன் பக்கோடா
செய்முறை:
புதினா, சோம்பு, மிளகாய் ஆகியவற்றை சற்று கரகரப்பாக அரைக்கவும். இஞ்சி&பூண்டு விழுதையும் அதோடு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, சோளமாவு, அரிசிமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, டால்டா இவற்றை ஒன்றாகப் போட்டு, பேபிகார்னையும் போட்டு பிசறவும்.
தேவையானால் சிறிது நீர் தெளித்துப் பிசறலாம். கடாயில் எண்ணெய் விட்டு, பிசறிய கலவையை பக்கோடாக்களாக உதிர்த்து விட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.