FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 22, 2016, 10:15:24 PM

Title: ~ இளமையைப் பாதுகாக்க இரவில் போட வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக் ~
Post by: MysteRy on March 22, 2016, 10:15:24 PM
இளமையைப் பாதுகாக்க இரவில் போட வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்

தற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலால் 25 வயதிலேயே சரும சுருக்கங்களுடன், முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடுகின்றனர். அதுமட்டுமின்றி, அதிகப்படியான வேலைப்பளுவால், சருமத்தைப் பாதுகாக்கக்கூட போதிய நேரம் இல்லாமல் போய்விட்டது.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Ffaqq.jpg&hash=137f0505388f76b0b1ba821e99b7eda63ea7ce60)

சருமத்தின் இளமையை பாதுகாக்க எப்போதும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள். அதுவும் இரவு நேரத்தில் படுக்கும் முன், ஒருசில ஃபேஷ் பேக்குகளைப் போட்டு வந்தால், நிச்சயம் இளமையைப் பாதுகாப்பதோடு அழகான மற்றும் பொலிவான முகத்தோடு திகழலாம்.
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
* முதலில் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை ஈரப்படுத்தி, பின் ஓட்ஸ் பொடியைக் கொண்டு மென்மையாக முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து, முகத்தைக் கழுவி, அடுத்து வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சிறிது மாய்ஸ்சுரைசரை முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும்.
* மில்க் க்ரீம் மிகவும் சிறப்பான மாய்ஸ்சுரைசர் மற்றும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கக்கூடிய பொருளும் கூட. எனவே 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
* ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
– இந்த இயற்கை ஃபேஸ் பேக்குகளை தினமும் இரவில் படுக்க செல்வதற்கு முன் போட்டு வந்தால் அன்றைய தினம் உங்கள் சருமத்தில் படிந்த அனைத்து மாசுக்களும் நீங்கி சருமம் தூய்மையாகவும், இளமையாகவும் காணப்படும்.