FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 22, 2016, 09:01:41 PM

Title: ~ வத்த குழம்பு ~
Post by: MysteRy on March 22, 2016, 09:01:41 PM
வத்த குழம்பு

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xlf1/v/t1.0-9/10420151_933353496779181_5358695669523936137_n.jpg?oh=37d42a30184382cf33682c64ecec55ba&oe=57937B83&__gda__=1464481020_88339c3bff772a8bc9dd5474881d2f56)

தேவையானவை :

சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
சாம்பார் பொடி - 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
மல்லி தூள் 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயம் - அரை ஸ்பூன்
புளி கரைசல் - சிறிதளவு

தாளிக்க
 
துவரம் பருப்பு - அரை ஸ்பூன்
கடலை பருப்பு -அரை ஸ்பூன்
காங்ந்த மிளகாய் - 3
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை
நல்ல எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு தேவையான அளவ

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் , துவரம் பருப்பு, கடலை பருப்பு,மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.

தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் பொடி வகைகளை போட்டு வதக்கி
அதனுடன் , புளி கரைசல் வறுத்து பொடித்த வெந்தயம் ,, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.

பின்பு நன்கு கொதிக்க வைத்து மசாலா வாசனை போனவுடன் குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் கறிவேப்பிலை துவி இறக்கவும்.