FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 20, 2016, 10:26:10 PM
-
ஃப்ரூட்ஸ் சப்பாத்தி ரோல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Ffre-3.jpg&hash=54a75346252daf94a46929d91465c659d28d4814)
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
ஆப்பிள் – 1/2 (பொடியாக நறுக்கியது)fruits-roll-Chapati
திராட்சை – 5
மாதுளை – 2 டேபிள் ஸ்பூன்
பேரிக்காய் – 1/2 (பொடியாக நறுக்கியது)
வாழைப்பழம் – 1 (பொடியாக நறுக்கியது)
மயோனைஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
செய்முறை
• கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
• பின்னர் மாவை சப்பாத்திகளாக சுட்டு தனியாக வைக்கவும்
• ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
• ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள பழங்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் சாட் மசாலாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
• பின்னர் சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்பு சப்பாத்தியின் மேல் மயோனைஸை தடவி, அதன் மேல் சிறிது உப்பு தூவி, பழக்கலவையை சப்பாத்தியின் மேல் வைத்து, ரோல் போல் செய்து பரிமாறவும்.
• இதேப் போன்று மற்றொரு சப்பாத்தியையும் செய்ய வேண்டும்.
• இப்போது சுவையான ஃப்ரூட்ஸ் சப்பாத்தி ரோல் ரெடி!!!