பிளேவியுஸ் யோசீப்பஸ்
யூத சரித்திர ஆசிரியர், கி.பி 37- 100
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Fjosephus.gif&hash=70104ac703085590cd3e52757a36d7a1cca58f5c)
யோசீப்பஸ் பென் மத்தேயு என்பது ஃபிளேவியுஸ் யோசீப்பஸ்-உடைய முழுப்பெயர். இவர் கி.பி 37- 38ல் (இயேசுகிறிஸ்து மரித்து 2 அல்லது 3 வருடங்கள்) எருசலேமிலே, மதிப்பிற்குரிய குடும்பத்தில் பிறந்தார். சிறு வயது தொடங்கியே இவர் யூத முறமைகளின்படி வளர்க்கப்பட்டார். தன்னுடைய 16 ஆவது வயதில் எந்த கல்வி சிறந்தது என்பதற்காக பரிசேயர், சதுசேயர் மற்றும் எஸ்ஸனர் என்பவர்களின் கல்விமுறைகளை கற்றார். கடைசியாக இவர் பரிசேயர் ஆவது என்பதை தெரிந்து கொண்டு, பரிசேயர் ஆனார்.
ரோமர்களுக்கு எதிரான கிளர்ச்சியில்(கி.பி 66-70) இவரும் தனிநாட்டு உரிமை கோரி யுத்தத்தில் பங்கேற்றார். ரோமர்களுக்கு எதிரான யுத்தத்தில் சில பகுதிகளில் இவர்கள் வென்றதால், நீரோ மன்னன் வெஸ்பாசியான் என்பவனை யூதேயாவுக்கு அனுப்பினான். வெஸ்பாசியனால் யூதேயாவின் பட்டணங்கள் ஒவ்வொன்றாக தோற்கடிக்கப்பட்டன. வெஸ்பாசியானின் படைகள் யோத்தப்பத்தாவை நோக்கி முன்னேறியது, அங்கு தான் யூதேய கிளர்ச்சியாளர்கள் எஞ்சியவர்கள் இருந்தனர்.
யூத கிளர்ச்சியாளர்களுக்கு தெரியும், ரோமர்களுக்கு எதிராக கலகம் செய்பவர்கள் மேல் ரோமர்கள் ஒருநாளும் இரக்கம் காட்ட மாட்டார்கள் என்று. ஒன்று சிலுவை மரணம் அல்லது அடிமைகளாக நாடுகடத்தப்படுவர்கள். இதனால் தற்கொலை செய்வதென்று முடிவெடுத்தனர். யோசீப்பஸ் அவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க முயன்றார், ஆனாலும் அவர்கள் அவர் பேச்சை கேட்கவில்லை.
யூதர்கள் தங்கள் முன் ஒரு தெரிவை வைத்தார்கள், தற்கொலை செய்தல் அல்லது ரோமர்கள் கையில் அகப்பட்டு துரோகி என்கின்ற பெயருடன் கொலைசெய்யப்படுதல். ரோமர்களின் கையில் அகப்படுவதை விரும்பாததனால் தற்கொலை செய்வதென்று தீர்மானித்தனர். நூற்றுக்கு அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டனர். யோசீப்பஸ் வீணாக தற்கொலை செய்வதை விரும்பவில்லை. அதனால் ரோமர்களிடம் சரணடைந்தார். நடந்த ஆண்டு கி.பி 67.
கி.பி 70 ஆண்டு தீத்துவினால் (வெஸ்பாசியானின் மகன்) எருசலேம் தேவாலயம் அழிக்கப்படுகையில் இவர் அதனை கண்ணூடாக கண்டார். இவர் ரோமர்களுடன் இருந்ததால் இவரும் தீத்துவுடன் ரோமுக்கு சென்றார். அங்கே இவருக்கு ரோமப்பிராஜாவுரிமை கிடைத்தது, அத்துடன் " ஃபிளேவியுஸ் " எனும் ரோமப்பெயரையும் வழங்கினார்கள். தன்னுடைய மிகுதியான வாழ்நாளை இவர் ரோமிலே வாழ்ந்தார். கி.பி 100ம் ஆண்டளவில் இவர் மரித்தார்.
ரோமில் வாழ்கின்ற காலங்களில் (கி.பி 75-79ல்) இவர் தன்னுடைய முதலாவது புஸ்தகத்தை எழுதினார். பெயர்: யூதர்களின் யுத்த சரித்திரம். இது 7 புஸ்தகங்களடங்கிய வெளியீடு. இதில் கி.மு 174 ஆண்டுகாலங்களில் நடந்த சம்பவங்கள், அந்தியோகு மற்றும் மெக்காபீயர்களின் எழுச்சி இன்னும் பல சம்பவங்களை அதில் குறிப்பிட்டிருந்தார்.
கி.பி 94 அளவில் அவர் மற்றுமோர் புஸ்தகத்தை எழுதினார், பெயர்: பண்டைக்கால யூதேயா. அதிலே வேதாகமத்திலுள்ள படைப்பு தொடங்கி கி.பி 66 வரையிலான சரித்திரமும், விடயங்களும் அடங்கியுள்ளன.
அதன் பிற்பாடு இன்னும் 2 சிறிய புஸ்தகங்களை எழுதினார், தன்னுடைய சுயசரிதை மற்றது அப்பியோனுக்கு எதிரான கருத்து அடங்கிய புஸ்தகம்.
இவர் எழுதிய புஸ்கங்கள் ஒன்றில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி இப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.
இயேசு வாழ்ந்த காலம் இது, மனிதர் என்று அவரை உண்மையாக சொல்லமுடியுமா? முடியுமென்றால், அவர் ஒரு ஞானமுள்ள மனிதர், அநேக அற்புதங்களை செய்தவர். அவர் அநேகருக்கு போதித்தார், அவருடைய சத்தியமான போதனைகளை மக்கள் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். பொந்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்டார். ஆனாலும் இயேசுவை உண்மையாக நேசித்தவர்கள், அவர்களுடைய நம்பிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை. மூன்றாம் நாளில் அவர் தம்முடைய சீடர்களுக்கு உயிருடன் காட்சியளித்தார். அவருக்கு முன்பு வந்த பல தீர்க்கதரிசிகள் அவரைக்குறித்து பல அற்புதமான தீர்க்கதரிசனங்கள் சொன்னது அவ்வளவும் அவருக்கு பொருத்தமாக இருந்ததது.