FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 19, 2016, 08:53:56 PM
-
(https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcS_gq7wYEiKaZEYyyLl8a9WsMP35kCq8YQ1ggEDcjGaliI0RQmM)
அக்கறை பூசிய உங்கள்
ஆறுதல்களின்
அச்சாரம் என்னவென்று
அறிந்து வைத்திருக்கிறது
அது...
அனலெனச்சுடும்
உங்கள் அக்கறைகளுக்காக
கோபம் தூவிய வார்த்தைகளை
கொப்பளித்ததில்லை....
அன்பிலூறிய இதயம்
அப்படித்தான் எப்போதும் ....
வலிகள் வலுத்தாலும்
காயப்படுத்தாத வார்த்தைகளை
கவனமாய் பிரசவித்தபடியிருக்கும்....
வெடித்தழுகிற அதன் அழுகைச்சப்தம்
வெளியே கேட்காத வரையில்
நம்பிக்கையோடு நீங்கள்
அக்கறை வீசிக்கொண்டிருக்கலாம்...
அது
அன்பிலூறிய இதயம்
அப்படித்தான்
எப்போதும் .....