FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 19, 2016, 08:37:34 PM
-
சிக்கன் மோமோஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2F-%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25AE%25E0%25AF%258B%25E0%25AE%25AE%25E0%25AF%258B%25E0%25AE%25B8%25E0%25AF%258D-e1458196590536.jpg&hash=3b82a34c99a729b1c00703eb9c1451fec5c7d100)
தேவையான பொருட்கள்:
சிக்கன் கைமா – 100 கிராம்
மைதா மாவு – அரை கப்
பால் – 100 மில்லி
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 5
கேரட் துருவல் – கால் கப்
முட்டைக்கோஸ் துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – ஒன்று
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
உப்புத் தூள் – தேவையான அளவு
பூண்டு டிப் செய்வதற்கு:
பூண்டு – 8 பற்கள்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 5
கொத்தமல்லித் தழை – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை கொத்தியும் வாங்கிக் கொள்ளலாம். இல்லையெனில் எலும்பில்லாத சிக்கனை நன்கு சுத்தம் செய்து நைசாக இல்லாமல் கொத்தியது போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். மைதா மாவுடன் உப்பு மற்றும் பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறிது எண்ணெய் தடவி ஊறவிடவும்.
சிக்கனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கோஸ் துருவல், கேரட் துருவல், மிளகு தூள், உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை மெல்லிய சப்பாத்தியாக திரட்டி, அதனுள்ளே சிக்கன் கலவையை வைக்கவும்.
அதை மூட்டை போல் மடித்து திருகி வைக்கவும்.
மீதமுள்ள மாவிலும் இதே போல தயார் செய்து, இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும். சிக்கன் மோமோஸ் ரெடி. பூண்டு டிப் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து டிப்பை தயார் செய்து கொள்ளவும்.
சிக்கன் மோமோஸை பூண்டு டிப்புடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.