FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 19, 2016, 08:29:11 PM

Title: ~ பாகற்காய் பச்சடி ~
Post by: MysteRy on March 19, 2016, 08:29:11 PM
பாகற்காய் பச்சடி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2015%2FJun%2Fa226e773-64ae-4f8d-a6d8-8e5038f72324_S_secvpf.gif&hash=e0367c0655e10367f6305d362a344a69ab214e94)

தேவையானவை:

பெரிய பாகற்காய் – 100 கிராம்
வெல்லம் – ஒன்றரை மேசைக்கரண்டி
புளி தண்ணீர் – அரை கப்
பச்சை மிளகாய் – 7
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
அரிசி மாவு – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

• பாகற்காயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
• வெல்லத்தை நுணுக்கிக் கொள்ளவும்.
• பச்சை மிளகாயை இரண்டாக கீறி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
• வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் நறுக்கிய ப.மிளகாய், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
• பிறகு அதில் வேக வைத்த பாகற்காயை போடவும். அதனுடன் பாகற்காய் வடித்து எடுத்த தண்ணீரில் கால் கப் தண்ணீரை அதில் ஊற்றி கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
•  ஒரு கொதி வந்ததும் வெல்லம் போட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
• அரிசிமாவை கால் கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் அதை கொதிக்கும் பாகற்காயுடன் ஊற்றி 4 நிமிடம் கொதிக்க விடவும். 4 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
• பாகற்காய் பச்சடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் புளி மற்றும் வெல்லம் சேர்ப்பதால் பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை போய்விடும்.