FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 19, 2016, 08:16:59 PM

Title: ~ காளான் பட்டாணி சப்பாத்தி ~
Post by: MysteRy on March 19, 2016, 08:16:59 PM
காளான் பட்டாணி சப்பாத்தி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F06%2Fchapati.jpg&hash=021b8e743d6ea9e04fe1fc6b649f028f9b1267e5)

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப் காளான் – 1/2 கப் (நறுக்கியது) பன்னீர் – 5 டேபிள் ஸ்பூன் (துருவியது) பச்சை பட்டாணி – 3 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது) பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது) தயிர் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – 3/4 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். எப்போது மாவானது சற்று கெட்டியாகிறதோ, அப்போது காளான், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து, கலவையை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு தயிர், பச்சை பட்டாணி, பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து, கலவை அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு பிசைய வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல்லானது சூடாவதற்குள் பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான காளான் பட்டாணி சப்பாத்தி ரெடி!!! இதனை கெட்சப் உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் விருப்பமான சட்னியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.