FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 19, 2016, 07:57:15 PM
-
(https://secondclassmatinee.files.wordpress.com/2012/09/680_mugamoodi_movie_stills9b13c21b1f7befe2519f1ec08d309b0e.jpg)
என்னிடத்திலொரு
முகமூடி இருக்கிறது
சில நேரம் அது
சிரிக்கிறது
சில நேரம் அது
அழுகிறது
சமயங்களில்
அனுதாபம்
அக்கறையென்று
அனைத்தும் கொட்டுகிறது...
ஆகவே தான் அது
நேசிக்கப்படுகிறது உங்களால்....
கவனியுங்கள்
நான்
உங்களில் சிலரை மட்டுமே
நேசிக்க முடியுமென்பதை
அறிந்திருக்கிற
அந்த முகமூடி
அதற்காகவே இப்போது
சிரிக்கிறது....
ஆகவேண்டிய காரியமென்று
உங்களிடம்
எதுவுமில்லை என்றாகையில்
அது
வீசியெறியப்படலாம் என்னால்
இருக்கட்டும் விடுங்கள்
அப்படியே கொஞ்சம்
அங்கேயும் கவனியுங்கள்
அதோ
நான் நேசிக்கிறவன்
வந்து கொண்டிருக்கிறான்
சிநேகம் வழிகிற சிரிப்புடன்..
முகமூடிக்கு பின்னாலிருக்கிற
எனது முகம்
சிரித்து விரிகிறது இப்போது ..
அவனது சிரிப்பு
அவனது முகமூடியாய்
இல்லாதிருக்குமேயானால்
இந்த முகமூடி
இனியெனக்கு தேவையில்லை தான் ....!
-
பிரபா உங்கள் அர்த்தமான கவிதைகள் மனதை கவர்கின்றன. வாழ்த்துக்கள்
-
அழகான கவிதை நண்பா பிரபா...
கண்ணுக்குத் தெரியாத
முகமூடி ஒன்று
காலம் காலமாக இருந்து வருகிறது
ஒவ்வொருவர் முகத்திலும்...!!
இந்த சுயநல உலகில் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் மட்டுமல்ல நாமும் முகமூடி அணிந்தால் தான் வாழமுடியும் என்ற கருத்தும் இயல்பாகவே நம் வாழ்வியலில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பது நிதர்சனம்.
நேசிப்பவர் உண்மையாய் இருந்தால் போலியில்லா அன்பை நான் தரத்தயார் என்கிறீர்கள், அப்படி இருந்தால் நல்லதுதான். முகமூடி இன்றி இயல்பாய் இருக்க முடியுமோ அதுவே நமக்கான இடமும் கூட...
-
கவிதைக்குள்
இதயம் புதைந்து எழுகையில்
சத்தமின்றி துயில்வோர்
இல்லம் சொன்றுவரும்
வலிகள் துளிர்க்கின்றன.....
ஏனென புரியவில்லை
எங்குமே ஏமாற்றங்கள்.....
ஏனைய கவிதைகளும் படித்தேன்.....
வேண்டிய தருணத்தில் கருத்துக்களை
பதிவிடுகின்றேன்.....
மாறன் நண்பா.....
தெளிவானதொரு
விளக்க குறிப்பு.....