FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 19, 2016, 07:29:30 PM

Title: விலகி நில்லடி கொஞ்சம்
Post by: PraBa on March 19, 2016, 07:29:30 PM
(https://scontent.fbom1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10653772_717660048288121_278413161618075347_n.jpg?oh=4a412319d7eea020724d3fc9cce1fab0&oe=57537C52)

விலகி நில்லடி கொஞ்சம்
மானொன்று
விரக்தியடைகிறது......
விலகி நில்லடி கொஞ்சம்
மலர்கள் மடிகிறது....
விலகி நில்லடி கொஞ்சம்
முயலொன்று முடங்குகிறது....
விலகி செல்லடி கொஞ்சம்
தேவதையொன்று
இவ்வழியே வருவதாய்
கேள்விப்படுகிறேன்....