FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 19, 2016, 06:06:23 PM

Title: ~ வாழைத்தண்டு முள்ளங்கி அரைத்த சாம்பார் ~
Post by: MysteRy on March 19, 2016, 06:06:23 PM
வாழைத்தண்டு முள்ளங்கி அரைத்த சாம்பார்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fsam-1.jpg&hash=cae60f2d3c0d2384da58253bb44678c66fef7736)

தேவையானவை:

முள்ளங்கி – 100 கிராம், வாழைத்தண்டு – பாதி, புளிக்கரைசல் – கால் கப், வெல்லம் – ஒரு டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – சிறிதளவு. வறுத்து அரைக்க: தனியா, தேங்காய்த் துருவல் – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, வெந்தயம், துவரம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன். தாளிக்க: நெய் – ஒன்றரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

முள்ளங்கி, வாழைத்தண்டை தோல் சீவி, வட்ட வட்டத் துண்டுகளாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்துக்கொள்ளவும். துவரம்பருப்பை, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, வாழைத்தண்டு, முள்ளங்கியை வேகவிடவும். வெந்ததும் புளிக்கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போகக் கொதிக்க விடவும். உப்பு சேர்த்து, அரைத்த விழுதைக் கரைத்து ஊற்றி, வெல்லத்தைப் பொடித்துப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் கொத்துமல்லி சேர்த்து இறக்கவும். நெய்யில், கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

பலன்கள்:

சிறுநீரகக் கல் வருவதைத் தடுக்கும். சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு, அது வலியின்றி வெளியேற உதவும். ஆண்மைக் குறைபாடு நீங்கும். கல்லீரலுக்கும் இதயத்துக்கும் பலம் கொடுக்கும் உணவு இது.