FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 19, 2016, 05:31:53 PM
-
என் இனிய தோழனே
பூமியே புழுதிக் காடாய்
மாறிக் கொண்டிருக்கையில்
நீ அக்னி புல்வெளியில் அமர்ந்து
புல்லாங்குழல் வாசிக்க
நினைப்பதேன் .......
ஆடையுடுத்திய
விலங்காய் மனிதனை மாற்றியது
விஞ்ஞானம்
கோடி உயிர்களைக்
கொன்று குவித்துவிட்டு
வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறது
விஞ்ஞானம்
அறிவியல் ஆக்கத்துக்கு
அடிகல்லான விஞ்ஞானம்
அழிவுக்கு அடிகல் நாட்டப் பார்க்கிறது
இனியவனே
இயல்புக்கு இருக்கை தர மறுத்துவிட்டு
முரண்களுக்கு முட்டுக்கட்டை கொடுப்பதை
நீ ஏன் விரும்புகிறாய்
நீ பூமியை
புரட்ட வேண்டாம்
பூகம்பத்தை
விரட்ட வேண்டாம்
மரிக்கும் வரையிலாவது
மனிதனாக வாழலாம்
வா
-
அதி சுந்தர வரிகள்..
சிந்தனை சிறப்பு,,,
வாழ்த்துக்கள் நண்பரே.