FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 18, 2016, 11:59:24 AM

Title: ஓவியம்
Post by: PraBa on March 18, 2016, 11:59:24 AM
சாத்தானை கடவுளும்
கடவுளை சாத்தானும்
வரைந்து முடித்திருக்கிறார்கள்
சாத்தான் வரைந்த
கடவுள்
சாத்தானைப்போலவே இருக்கிறது
கடவுள்  வரைந்த
சாத்தான்
கடவுளைப்போல இல்லை
சாத்தான்
சாத்தானாகவே இருப்பதற்கான
காரணம்
கசியத்துவங்குகிறது...
நடிக்கத்தெரியாத சாத்தானை
நாம்
வசையத்துவங்குகிறோம்....
புன்னகை மாறாத
கடவுள்
பார்த்துக்கொண்டிருக்கிறான்....
சாத்தானின் ஓவியம்
கச்சிதமாய் தெரிகிறது
கடவுளைப்போலவே....!
Title: Re: ஓவியம்
Post by: SweeTie on March 23, 2017, 06:46:04 AM
பிரபா  உங்கள்  அறிவான  மணி மணியான  கருத்துக்களுக்கு  நன் ரசிகை.
வாழ்த்துக்கள்
Title: Re: ஓவியம்
Post by: EmiNeM on March 23, 2017, 11:40:40 AM
Nanba,

enne oru sinthanai.. mayangi vitten.. un kavithayin arthangal aayiram..

Ull ondru vaithu puram matrondru pesupavargalaiye ulagam nambugirathu... enna seiya..

vaazhthukkal nanba
Title: Re: ஓவியம்
Post by: ரித்திகா on March 23, 2017, 02:01:25 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.thaigoodview.com%2Flibrary%2Fline%2Fline303.gif&hash=e95f5c85492c2f5f4a5fa04858f31dc0d479f2bb)

~ !! வணக்கம் பிரபா !! ~
(https://d1v8u1ev1s9e4n.cloudfront.net/551188145ccacf24b7499347)

~ !! மிக அருமையான கவிதை !! ~
~ !! தொடரட்டும் பயணம் !! ~
~ !! மனமார்ந்த வாழ்த்துக்கள் !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.thaigoodview.com%2Flibrary%2Fline%2Fline303.gif&hash=e95f5c85492c2f5f4a5fa04858f31dc0d479f2bb)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsmayli.ru%2Fdata%2Fsmiles%2Fcveta-399.gif&hash=38225338f53f2d78242e3a716191a4cfc798623e)
~!! ரித்திகா !!~
Title: Re: ஓவியம்
Post by: VipurThi on March 25, 2017, 01:07:29 AM
Praba na:) kavithai super na:) rmba different aana thinking ungalodathu;)
Title: Re: ஓவியம்
Post by: Maran on March 25, 2017, 06:31:44 PM




அழகான கவிதை பிரபா!

கடவுளை நாம் விரும்புவதற்கே சாத்தான் படைக்கப்பட்டான். கடவுளின் முதல் அவதாரம் சாத்தான், சாத்தானின் கடைசி அதிகாரம் கடவுள்.

உண்மையில் சாத்தானை சிலர் கடவுள் என்றும் அழைப்பர். நல்லவனைப்போல் நடிக்கத்தெரியாததால் கூட இருக்கலாம்.