FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 17, 2016, 11:50:24 PM

Title: ~ பாஸ்தா ஜம்போ ஷெல் ~
Post by: MysteRy on March 17, 2016, 11:50:24 PM
பாஸ்தா ஜம்போ ஷெல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fpaaa-e1458026271743.jpg&hash=34d88e7613a75f700ff504f0500bd8249a7c325d)

பாஸ்தா Jumbo ஷெல் – 20
பாஸ்தா சாஸ் – ஒன்றரை கப்
பார்மஜான் சீஸ் – 1/2 கப்
பாஸ்தா ஷெல்லில் வைக்க தேவையானவை (Stuffing):
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 tsp
வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று
காரட் – ஒன்று
பச்சைப் பட்டாணி – கால் கப்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – சிறிது
கரம் மசாலா தூள் – சிறிது
ஆலிவ் ஆயில் – இரண்டு தேக்கரண்டி
முட்டை – 1
சீஸ் – அரை கப்

காரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து மசித்துக்கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
பாஸ்தாவை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு உப்பு போட்டு 8 நிமிடம் வேகவைக்கவும். பாஸ்தா வெந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, துருவின காரட், மசித்த கிழங்கு, பச்சை பட்டாணி, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் பாஸ்தா வேக வைத்த நீரை சிறிது சேர்க்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு ஒரு முட்டை, 1/2 சீஸ் போட்டு கிளறவும்.
தயாரித்து வைத்துள்ள stuffingயை ஒவ்வொரு பாஸ்தா ஷெல்லின் உள்ளேயும் வைக்கவும்.
பின்பு பேக்கிங் பாத்திரத்தில் பாஸ்தா சாஸ் ஒன்றரை கப் ஊற்றி வைக்கவும். ஸ்டஃப்பிங் செய்துவைத்துள்ள ஷெல்களை அதில் வரிசையாக அடுக்கவும்.
பிறகு அவற்றின் மீது சீஸ் துவி பத்து நிமிடம் பேக் செய்யவும். இப்பொழுது சூடான இத்தாலியன் பாஸ்தா ரெடி.