FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 17, 2016, 07:29:00 PM
-
(https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcT5T6luomSTB1yMic9n9O9CuJ2qekz2rzsc4iGyVZidHxuMXBrF)
சரி விடு
அங்கென்ன மழையா
என்கிற உன்
முதல் கேள்வியிலிருந்தே
துவங்கட்டும்
உனக்கும்
எனக்குமான பந்தம்....
இல்லையென்று
இனியெதற்கும்
உன்னிடத்தில்
பதிலளிக்க கூடாதென்றேனும்
நினைத்திருக்கலாம்....
சட்டென பெய்யத்துவங்கிய
இம்மழை....
மெலிதாயொரு தூரலென்று
பதிலளிக்கிறேன்....
அக்கணமே
ஒரு மௌனம்.....
ஒரு வெட்கப்புன்னகை....
ஒரு வெட்டவெளி மழை.....
எல்லாம் நனைக்கிறது
என்னை தொப்பலாய்.....
பொறு...
மழை கொஞ்சம் மௌனிக்கும்....
வெட்க மழை
வெட்டவெளி புன்னகை
எல்லாம் சொந்தமாகும்
உனக்கு .....!