FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 17, 2016, 07:18:59 PM
-
(https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/1554492_1746902768929219_5706307853545320768_n.jpg?oh=23e1f61e32f0ad5266d52b128b74e01a&oe=578AD448)ஒரு
அலைபேசிச்சிணுங்கல் வழியே
அனுப்பியிருக்கிறாய்
அக்கேள்வியை...
முகமேனும் நினைவுண்டோ
என்று....
எதுவும் நினைவில்லையென்று
எப்படி சொல்ல ....?
முதல் சந்திப்பின் போது
உனதாடை
நீலமென்று
நினைவில்லை எனக்கு ...
தனித்தே தவித்திருந்த
ஒற்றை வளையல்
நினைவில்லை எனக்கு ...
சற்றே நகர்ந்திருந்த பல்வரிசை
சற்றும் நினைவில்லை எனக்கு ....
இடக்கை பற்றிய
வலக்கை நளினம்
நினைவில்லை எனக்கு ....
விழியோரம் நீண்டிருந்த
மை கூட நினைவில்லை...!
எதுவும் நினைவில்லை
என்னருகில் நீயில்லை.....!
பதிலேதும் இல்லையென்று
மறுபடியும் சிணுங்கட்டும்
அதிலேதும் தவறில்லை ....
எதுவும் நினைவில்லையென்று
எப்படி சொல்ல
நான் உனக்கு .....?
-
சிட்டுக்குருவியின் சிறகினை போல் அதிமென்மையான வரிகள் !!
வாசித்திட வசீகரிக்கின்றது !!