FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 16, 2016, 09:23:40 PM

Title: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 16, 2016, 09:23:40 PM
(https://pbs.twimg.com/profile_images/460069285331611649/Ejytmm07_400x400.jpeg)
கூரையை பிய்த்துக்கொண்டு
கொட்டுமென்று சொன்னவன்
கூரை பிய்ந்து
என் தலையில் விழுமென்பதை
சொல்லவே இல்லை ....
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 16, 2016, 09:24:39 PM
குரல்வலையில்
கால் வைத்தோர்
கவிதை சொல்கிறாய்
விமர்சிக்க
திராணியில்லை எனக்கு
மிரளுமென்
விழிகளை கருவாக்கி
மீண்டுமோர்
கவிதை சொல்கிறாய்
வலியை அலங்கரிக்கிறது
உன்
வார்த்தைகள் ....
கவிதை கனக்கிறது
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 16, 2016, 09:26:11 PM
கண்களை விற்றேனும்
ஓவியம் வாங்க போகிறேன்
வரைந்தவன்
பசித்திருக்கிறான்
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 16, 2016, 09:34:03 PM
நொறுங்கிப்போன கனவுகளை
பொறுக்கிக்கொண்டிருந்தவன்
விழிகளில்
விரிந்து கொண்டிருக்கிறது
அடுத்த கனவு.....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 16, 2016, 09:37:50 PM
வீசியெறியப்படும்
உங்களின்
காலியான மதுப்புட்டிகள்
உடையாமலிருக்குமேயானால்
ஓட்டைக்கோணியில்
அதை சேகரிக்குமவனுக்கு
நீங்கள்
கடவுளாகவும் இருக்கலாம் ....!
கடவுள்
போதையிலிருப்பதாய்
கடைசி வரை
சொல்லிக்கொண்டே இருப்பான்
அவன்....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 16, 2016, 09:50:27 PM
தீர்த்தவன் பெயரும்
தீர்த்துக்கொண்டவன் பெயரும்
பொறிக்கப்பட்டாகிவிட்டது....
பார்த்துக்கொண்டிருக்கிறான்
தன்பெயரை
தாகத்தோடு அவன்....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: aasaiajiith on March 17, 2016, 02:12:42 PM

முறையே மூன்றாம்  , நான்காம் மற்றும்  இறுதி பத்தி
மிரண்டுதான் போனேன்  வாசித்து முடித்ததும் !!

அபாரம் !!
நல்ல கற்பனை வளம் !!
தொடர்ந்து எழுதவும்!!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 17, 2016, 07:30:32 PM
எழுதியவரையில்
எதுவும் நீயில்லை
என்கையில் தான்
அது
கவிதையானதாய் ஞாபகம் ...!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 17, 2016, 07:31:22 PM
அடையாளம் தெரிகிறதா பாருங்கள்
அங்கே
புத்தம் தேடிக்கொண்டிருப்பவன்
புத்தனே தான் ....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 17, 2016, 07:31:57 PM
ஒரு
மழையின் சாரல்
உன்னை
நனைக்க துவங்கியது ...
ஒரு
சாரலின் மழை
என்னை
நனைத்துவிட்டது....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 17, 2016, 07:34:05 PM
இரையாகும்
கரையான்கள்
கால் கடித்தாலும்
வலி தாங்கும்
பறவை.....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 17, 2016, 07:35:00 PM
வாழிடம்
வானமெனில்
நனைவது சாத்தியமில்லை ....
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 17, 2016, 07:41:26 PM
துரோகியென்று உன்னை
அடையாளப்படுத்துகையில்
நண்பனென்பதையும்
ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 17, 2016, 07:43:41 PM
நிறைவேறாத ஆசைகளோடு
செத்துப்போகிறவன்
ஆவியாகவேனும்
அலைந்துகொண்டிருக்கிறான்
எல்லாம் நிறைவேற்றி சாகிறவன்
என்னவாகிறானென்பது மட்டும் தெரியவில்லை ...!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 17, 2016, 07:48:16 PM
குறுக்கும் நெடுக்குமாயிருக்கிற
அந்தக் கோடுகள்
நதிகளென்றே
நம்ப வைக்கப்பட்டிருக்கிறது
தேச வரைபடத்தில்....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 18, 2016, 12:52:00 AM
மீண்டும் மீண்டும்
அன்பு வீசுகிறாய்
அது
வன்முறை என்று
அறியாமலே.....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 18, 2016, 07:46:19 PM
எழுந்து
பறக்கபோவதில்லை
அந்த பட்டாம்பூச்சி
விழுந்து கிடக்கிறது
வீதி மண்ணில்
சிறகென்னவோ
அசைந்துகொண்டுதானிருக்கிறது.....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 19, 2016, 07:23:10 PM
வந்து போகும்
உனது விம்பத்தில்
விழாமலே இருக்கிற
சுருக்கங்கள் மட்டும் தான்
எனது
சாட்சியாயிருக்கிறது
அல்லது
காட்சியாயிருக்கிறது...
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 19, 2016, 07:33:56 PM
என்னில் பாதியென்று
எப்படி சொல்ல .....?
நானே
நீ தான் ......
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 19, 2016, 07:49:04 PM
அவசரக்குடுக்கையென்று
அடிக்கடி
அறிவிக்கப்படுகிறவன்
அன்பு கொட்டுவதை
நிறுத்திக்கொண்டதாய்
தகவல் இல்லை ...!

 ;) ;)
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 20, 2016, 08:39:37 PM
(https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTUEVNnNnC2X9lM7hnCUqIwiaxW2zYBEY6QF1rozkMef266eDCb9w)
சிந்தனை என்பது
சந்தன பேழை
சிந்தனை கிளற
வந்தவள் நீயே....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: SmileY on March 21, 2016, 02:18:04 PM
really superb praba ...

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.shutterstock.com%2Fs%2Fsuperb%2Fsearch-vectors.html&hash=94b09169d0ce26a5bab07e61fb1fffe1ae66a008)
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: LoShiNi on March 21, 2016, 02:33:04 PM
Enaku mattum tamil padika terilaye..


                                              (https://www.stayathomemum.com.au/wp-content/uploads/2013/10/tantrum.jpg)
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PaRushNi on March 21, 2016, 03:55:37 PM


சுருக்கமான கிறுக்கல்கள்
ஆழமான அர்த்தங்கள்

வாழ்த்துக்கள் பிரபா !
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 21, 2016, 07:00:55 PM
சிலவற்றை
எழுத
ஆசையாயிருக்கிறது
உங்களை
நேசிப்பது
தடையாயிருக்கிறது....!



Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 21, 2016, 07:01:51 PM
நீருக்குள்
நெருப்பொன்று
தகதகத்திருக்கிறது
நீர்
தெளிந்து
பார்ப்பதே
பாக்கியாயிருக்கிறது....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 21, 2016, 07:23:21 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fthumb%2Fmsid-48451267%2Cwidth-400%2Cresizemode-4%2F48451267.jpg&hash=b21537561a4f03afe01e5df06ebd2d5e3a654a47)

அள்ளித்தெளித்து
முகம் கழுவுகிறாய்
நீ.....
சிதறுகிறேன் நான்....
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 21, 2016, 08:35:41 PM

எதற்குமொருமுறை
எழுப்பிப் பாருங்கள்
எதையும் சாதிக்காத
என்னை..!
உயிர் இருக்கும் ..

 ;)
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 22, 2016, 07:49:07 PM
ஈசலென புறப்படுகிறது
உன் மீதான
எனது கோபம் ..!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 22, 2016, 07:53:12 PM

சற்று முன்
மழையாயிருந்தது
தற்சமயம்
சகதியாயிருக்கிறது....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 22, 2016, 08:27:07 PM
செத்துப் போனது "நீ"
செத்தே போனது "நான்"
வாழ்கிறது "நாம்"
மரணம் முதலிலும்
ஜனனம் பிறகுமாய்
"காதல்" மட்டும்..!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 22, 2016, 08:32:20 PM
சுயநலவாதி நான்..!
எனக்கு கிடைக்காதவைகளை மட்டுமே
உங்களுக்கு வழங்கப்போவதாய்
உறுதியளித்துக்கொண்டிருக்கிறேன்..!
என்னிடத்திலிருப்பதை தரப்போவதில்லை..!
அதனால் தான் சொல்கிறேன்
என்னைத்தவிர
எல்லோரையும் நேசியுங்கள்..!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 23, 2016, 11:41:40 AM

கல்லுக்குள் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
தேடத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
தேரை கடவுளில்லை..!
தூண்துரும்பில் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
கவனிக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான்கள் கடவுளில்லை..!
மனிதனுக்குள் தான் கடவுளென்று
நீங்கள் உபதேசித்தபோது தான்
சிந்திக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான் அல்லது தேரையே
கடவுளாக இருந்திருக்கலாம்..!
தேடல் சுலபமாக முடிந்திருக்ககூடும்..!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 23, 2016, 11:42:57 AM
உன்னால்
உச்சரிக்கப்படாத
வார்த்தைகளுக்காக
ஆயிரம் அளபெடைகளோடு
காத்திருக்கிறேன் நான்..!
ஆனால்
நீயோ
உன்
மெளனத்திற்கு
அளபெடைகள்
சேர்த்துக்கொண்டிருக்கிறாய்..!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: aasaiajiith on March 23, 2016, 05:05:48 PM
கல்லுக்குள் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
தேடத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
தேரை கடவுளில்லை..!
தூண்துரும்பில் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
கவனிக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான்கள் கடவுளில்லை..!
மனிதனுக்குள் தான் கடவுளென்று
நீங்கள் உபதேசித்தபோது தான்
சிந்திக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான் அல்லது தேரையே
கடவுளாக இருந்திருக்கலாம்..!
தேடல் சுலபமாக முடிந்திருக்ககூடும்..


எண்ணம் எழில் !!
சிந்தனை சிறப்பு !!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 23, 2016, 07:29:40 PM
ஓடும் அவசரத்தில்
தட்டுப்படாத தடையொன்றின்
கட்டுப்படாத தாக்குதலில்
பெயர்ந்து விழுந்த
பெருவிரல் நகம்
கற்றுக்கொடுத்த பூமி
பெற்றுக்கொண்ட தட்சிணையே..!
ஓடுவதை
ஏன் நிறுத்த வேண்டும் நான்...?
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 23, 2016, 07:30:29 PM
சாக்கடை தழுவியும்
வருவதுண்டு..!
பூக்களை தழுவியும்
வருவதுண்டு..!
சாக்கடை மீதும்
கோபமில்லை..!
பூக்களின் மீதும்
ஆசையில்லை..!
தீண்டலில் பேதமும்
காட்டவில்லை..!
ஆசை கோபம்
வென்று விட்டாய்..!
பேதம் என்பதை
கொன்று விட்டாய்..!
காற்றே நீ ஒரு
ஞானி அன்றோ..?
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 23, 2016, 07:38:00 PM
முதல் கவிதை

உன் மடியில் நானிருக்க
என் தலை முடிக்குள்
உன் விரல்கள் வரைந்ததே
தமிழின் முதல் கவிதை..!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 24, 2016, 08:01:35 PM
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு பலம் கூட்டி
விசிறியடியுங்கள் என்னை
தடைகளை நோக்கி...!
கொஞ்சம் விலகி நில்லுங்கள்
ரப்பர் பந்து நான்..! ;D ;D ;D
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on March 24, 2016, 08:12:53 PM
தாய்


நான் பார்த்த
அந்த தேவதைக்கு
அழகில்லை சிறகில்லை
அற்புதமாய் ஒளியில்லை..!
நிலவூட்ட ஒன்றும்
உணவூட்ட ஒன்றுமாய்
இரு கரங்கள் மட்டுமே உண்டு..!
ஆனாலும் தோற்கும்
ஆயிரம் தேவதைகள்
அந்தத் தேவதையிடம்..!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on April 01, 2016, 08:09:09 PM
பகர்வதற்கோர் நாதியில்லை எவ்விடத்தும் எம்நிலை
நகர்வதற்கோர் வழியில்லை எவ்விடத்தும் எம்நிலை
புகர்வதற்கோர் இடமில்லை எவ்விடத்தும் எம்நிலை
தகர்வதற்கோர் நாள்வருமோ நெஞ்சே சொல்..!
வெண்கொற்றக் குடைநிழலில் வெள்ளாமை செய்வோமோ
புண்பெற்ற நெஞ்சோடு புல்லாகிப் போவோமோ
என்குற்றம் செய்தோமோ என்றேனும் தோற்போமோ
மண்பெற்றே வாழ்வோமோ நெஞ்சே சொல்..!
நின்றெரியும் நெஞ்சுக்குள் நீங்காத நெருப்பெனவே
வென்றெறியும் வேட்கைக்கு நாடாகும் விடையெனவே
கன்றெறியும் அம்புக்கும் அஞ்சிவிழும் அவர்கூட்டம்
என்றறியும் நாள்வருமோ நெஞ்சே சொல்..!
பெரும்பகை கொண்டே வருமவர் கூட்டம்
கரும்புகை போலும் விலகிடும் ஓட்டம்
அரும்புகள் கூடும் பெருமகிழ் ஆட்டம்
வரும் ஒரு நாளென்றே நெஞ்சே சொல்..!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on April 01, 2016, 08:15:41 PM
ஆழி கடைந்து கொண்டிருக்கிறார்கள்
அசுரர்களும் தேவர்களும்....
பெருமானாய் நின்று கொண்டிருக்கிறேன்
நான் ...

நஞ்சு வந்தால்
நான் தின்ன வேண்டுமென்று
ஞாபகமிருக்கிறது எனக்கு .....

அங்கிருந்து முறைத்தபடியிருக்கிறாள்
அவள்...

சங்கு நெரிப்பாளென்பதும்
ஞாபகமிருக்கிறது....
ஆழி தெளிகிறது...
நஞ்சுறுதி ...
தெரிகிறது ....

நெஞ்சுறுதி
தொலைகிறது...

நகர்ந்து விட எத்தனிக்கிறேன்
பெருமானேயென்றொரு குரல்
பேரதிர்ச்சி தருகிறது
இனியென்ன செய்வது ...?

நஞ்சை அமுதென்று
நம்ப வைப்பதொன்றும்
சிரமமில்லை....

நான் .... பெருமானென்றறிக....! 8)
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on April 01, 2016, 08:22:05 PM
நீயும் நானும் தான்
பேசிக்கொண்டிருக்கிறோம்
அவிழ்த்துக்கொட்டப்படுகிறது
போலியாய் சில சந்தோஷங்கள்

நகர்ந்து செல்லும்
நிமிடங்களை பற்றி
நட்பெங்கே கவலைப்பட்டிருக்கிறது...?

நீளும் இந்த கணத்தின்
இடையிலிருந்து துவங்குகிறது

சில வலிகளின் பகிர்வும்
சில விரக்திகளின் பகிர்வும்..
உள்ளிழுத்த மூச்சுக்காற்றை
முழுவீச்சில் வெளியேற்றியபடி சொல்கிறாய்

நாயறியுமா நன்றும் தீதுமென்று...

நன்றும் தீதும்
நாயறிந்து என்ன செய்யப்போகிறதென்கிறேன்
நான் ....

அறை நிரப்புகிறது
நம்மிருவரின் சிரிப்பு...

சரிதான்
நாயறிந்து என்ன செய்யப்போகிறதென்கிறாய்...
வால் வெட்டப்பட்ட நாயொன்று
வாசல் கடக்கிறது
நம்மை நோக்கிக் குரைத்தபடி..

நாய் பாஷை
அறிந்திருக்கவேண்டிய
அவசியமென்றெதுவுமில்லை...!
நமக்கது புரிகிறது...
Title: கி(ச)றுக்கல்கள்...
Post by: வாசகன் on April 05, 2016, 06:48:51 PM
கிறுக்கியது  பேனாமுனையில்
                               நீங்களே..
சறுக்கியது  ரசனையில்
                            நாங்களே...


இப்படிக்கு..

வாழ்த்த வார்த்தைகள் இன்றி
                       வாசகனாய் நான்...





Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on April 19, 2016, 08:10:26 PM
கறை படிந்த சிறுவன்
கடைப்பலகையில்
எழுதப்பட்டிருக்கிறது
பஞ்சர் ஓட்டப்படும் என்று....
நீங்கள் கேலி செய்கிறீர்கள்..!
அது
ஓட்டப்படும் இல்லை
ஒட்டப்படும் என்று....
ஒட்டுவது
ஓட்டுவதற்க்குத்தானே என்ற
அவனது பதிலை
நீங்கள்
எதிர்பார்க்கவில்லை என்பதை
உங்கள் மௌனம் அறிவிக்கிறது.....
இலக்கணம் கிறுகிறுக்கிறது
தலைக்கனம் தெறிதெறிக்கிறது....
குறிலுக்கும்
நெடிலுக்குமான உங்கள்
எண்ணத்தை
கிழித்தெறிகிறது
அவனது
ஒற்றை பதில் ....!
இரட்டுற மொழிதலுக்கும்
பகட்டுற மொழிதலுக்குமான
வித்தியாசம் என்னவென்று
உறைத்திருக்கக்கூடும்
உங்களுக்கு ...
உறையச்செய்யும்
உண்மையிலிருந்து
உஷ்ணம் பறக்கிறது...
அடுத்த வண்டியின்
சக்கரம் கழற்றிக்கொண்டே
உங்களைப்பார்த்து சிரிக்கும்
அவனது சிரிப்பு
உங்களை
சுட்டிருக்கலாம்
அல்லது
நீங்கள்
செத்திருக்கலாம்....!
சில
இலக்கணங்கள்
வரையறுக்கப்படுவதை விட
கருவறுக்கப்படுவதே
சரியென்றறிக.....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on April 19, 2016, 08:16:05 PM
கதவு தட்டப்படுகிறது
கடவுள் வந்திருக்கிறேனென்ற அறிவிப்போடு....

எழத்திராணியின்றி
நீர் பருகிப்படுத்திருக்குமவன்

நீ
எந்த மதத்தின் கடவுளென்று
எதிர் கேள்வி
கேட்கப்போவதில்லை....

மீண்டுமொரு தட்டப்படுகிறவரை
எழுவதற்கான பிரயத்தனமென்று
எதையுமே செய்யப்போவதுமில்லை...
மறுமுறையும் தட்டாதவன்
கடவுளாக இருக்கப்போவதில்லை...
தட்டப்படுமாவென்று

பார்த்தபடியிருக்கிறான் அவன்
திறக்கப்படுமாவென்று
கவனித்தபடியிருக்கிறான் கடவுள்
மௌனமாயிருக்கிறது கதவு...
கதவுகள் அப்படித்தான் ...

கடவுளேயானாலும்
மூடியவன் திறக்கும்வரை
உண்மை சொல்வதில்லை..
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on April 19, 2016, 08:22:50 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.samakalam.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F06%2Fwind1.jpg&hash=65c2955aef39f941ce7f2478b07cd8aeea200bc2)



எனக்கான
காற்றுவருமென்று
ஜன்னல் திறந்து
காத்திருக்கிறேன்

எதிர்த்திசை
காற்றொன்று வந்து
அதை மூடிவிட்டு போகிறது
விரக்தியும் வெறுப்புமாய்

விழிகள் மூடுகிறேன்

இடித்துத்திறந்த ஜன்னலின்
இடுக்கு வழியே தெரிகிறது
கடந்து போகும்
உனதுருவம்....

என்திசைக்காற்று வந்து
ஜன்னல் திறக்கிறது ...

எனக்கான
காற்றென்றதை
இப்போது
சொல்ல முடியாது தான் ....

ஒரு துரோகம்

ஒரு வலி

ஒரு பிரிவு

இவைகளையெல்லாம்
இடுக்கு வழியே
மறைத்துக்கொண்ட
ஒரு
குரூரதிருப்தியை தவிர
எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை
எனக்கு ...

என்னைப்போலவே
எத்தனை துரோகங்கள்
ஜன்னலுக்குப்பின்னால்
ஒளிந்திருக்கிறதோ....!

யாரறிந்து சொல்ல முடியும் ....

துரோகங்கள்
வாசலுக்கு வருவதில்லை

அவை
ஜன்னலுக்கு பின் மட்டுமே
வாசம் செய்கின்றன
திறந்துகொண்ட ஜன்னலை
திரும்பிப்பார்க்கமாட்டாய் நீ
ஆனாலும் கூட
காற்று வீசியபடியிருக்கிறது
ஜன்னல் திறந்தபடியிருக்கிறது
படபடக்கிறது
ஒரு துரோகம் ....!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on October 22, 2016, 07:16:42 PM
நான்
நதி வரைந்து
முடித்திருக்கிறேன்
அவன்
அணை வரைந்து
முடித்திருக்கிறான்...
நதியை
பத்திரப்படுத்த வேண்டும்
இப்போது நான்..!
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: ரித்திகா on October 24, 2016, 11:43:05 AM
(https://sol2611.files.wordpress.com/2013/05/51rosas.gif)

தங்களின் கிறுக்கல்கள்
அனைத்திலும் மெய்சிலிர்ந்தேன் ......
அருமையான கிறுக்கல்கள் ....
தொடரட்டும் கிறுக்கல் .....
வாழ்த்துக்கள் .....!!!
நன்றி ....!!!!!

(https://sol2611.files.wordpress.com/2013/05/51rosas.gif)

~ !! ரித்திகா !! ~
Title: Re: எனது கிறுக்கல்கள்...,
Post by: PraBa on October 24, 2016, 04:13:28 PM
தமிழனாய்
ஒருமுறை அவதரித்துவிட்டு
போதியுங்கள் இயேசுவே
மறுகன்னம் காட்டும்
உங்கள் போதனையை