FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 16, 2016, 06:40:33 PM

Title: எவர் போதிப்பது உங்களுக்கு..,
Post by: PraBa on March 16, 2016, 06:40:33 PM
(https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS_FdkKeaRr-TT12MglxqeSFlCr9rUuAO0UBoytuZGLnmK4Fw_1Pl1MGgY)அவ்விடம் வி�ட்டு
அகலும் வரையில்
அவளை
அவன்
விபசாரியென்று
அடையாளப்படுத்த போவதில்லை
அதோ அந்த
தெருமுனை திருப்பத்தில்
தலைமறைந்த பின்
எதிர்ப்படும் எல்லோரிடத்திலும்
அவளை
விபசாரியென்று மட்டுமே
சொல்லப்போகிறான்
எதற்க்கிந்த பிழைப்பென்று
ஏளனம் செய்யப்போகிறான்
மானத்திற்கும்
வருமானத்திற்குமான
வித்தியாசம் போதிக்கப்போகிறான்
அவனோடு சேர்ந்து
நீங்களும் உமிழக்கூடும்
அவளொரு விபசாரியென்று...
ஒழுக்கங்கெட்டவள்
இத்தெருவில்
இருக்ககூடாதென்று சொல்லிவிட்டு
எத்தெருவில் இருக்கப்போகிறாளென்று
விலாசம் வாங்கிக்கொள்ள கூடும்
அவளிடத்தில் அவன்...
எப்போதேனும்
அவன் சொல்லும்
அவள்
அவனெதிர்வரும் கணத்தில்
எவர் தலை முதலில்
கவிழ்கிறதென்று
கவனித்தாலும் நீங்கள்
சொல்லப்போவதில்லை
அவனொரு
ஆண் விபசாரியென்று....
எது ஒழுக்கமென்று
எவர் போதிக்கப்போகிறீர்கள்
அவனுக்கு ?
அடுத்தொருவன் வந்தாலும்
அணைக்கத்தான் போகிறாள்
அவள்.....
எது ஒழுக்கமென்று
எவர் போதிப்பது உங்களுக்கு...?
Title: Re: எவர் போதிப்பது உங்களுக்கு..,
Post by: aasaiajiith on March 17, 2016, 02:16:46 PM
கனன்று ஏறியும் தீயாய் வரிகள் !!

தொடர்ந்து எழுதவும் !!