FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 16, 2016, 09:13:07 AM

Title: ~ ஆயுள், ஆரோக்கியத்துக்கு சைவ உணவு! ~
Post by: MysteRy on March 16, 2016, 09:13:07 AM
ஆயுள், ஆரோக்கியத்துக்கு சைவ உணவு!

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12798952_1547094435588026_1109741150608596671_n.jpg?oh=ed4a7ccd610f6c49c76fd2a9e3ad497e&oe=574C2F34)

* சைவ உணவுகளில் உள்ள பீட்டா கரோடீன், வைட்டமின் ஏ, சி போன்றவை புற்றுநோய் வராமல் காக்கிறது. தக்காளி, ஸ்டாபெர்ரியில் உள்ள லைகோபீன் (lycopene), பெரும்பாலான புற்றுநோய்களை முற்றிலுமாகத் தடுக்கிறது. குறிப்பாக, வயிறு தொடர்பான புற்றுநோய்களிலிருந்து காக்கும் சுவராக அமைகிறது சைவ உணவுகள். இதில் சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் நார்சத்துகள் மிகுதியாக உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னை வரவே வராது.
* சைவ உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் இதயச் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நாட்பட்ட நோய்கள், உயர் ரத்த கொதிப்பு, இதய நோய், சர்க்கரை நோய், உடல்பருமன், வளர்சிதை மாற்றம் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
* காய்கறிகளும், பழங்களும் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் ஆண்டிஆக்சிடண்டின் அளவு அதிகரிக்கும். இதனால் எந்த நோயும் எளிதில் நம்மை நெருங்காது. உடலில், புற ஊதாக் கதிர்கள் பட்டாலும் சருமத்தை பாதிக்காது. முதுமை தோற்றம் தடுக்கப்படும். நாளடைவில் தோன்றும் சுருக்கங்களும் வராது