FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 15, 2016, 10:10:58 PM
-
கொத்து புட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Ffree1.jpg&hash=7adef03cf1079a6eefecdef1cae24ed5223178a7)
தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு – ஒரு துண்டு (அல்லது) ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
மெல்லியதாக நறுக்கிய இஞ்சி – சிறிது
பச்சை மிளகாய் – 2
குழம்பு கிரேவி – அரை கப்
உப்பு – சிறிது
தாளிக்க:
எண்ணெய், கடுகு
மிளகாய் வற்றல் – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்).
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள்ள புட்டைச் சேர்த்துக் கலந்துவிடவும்.
அத்துடன் குழம்பு கிரேவியை சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
மாலை நேர டீயுடன் சாப்பிட, சுவையான கொத்து புட்டு தயார். கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.