FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 15, 2016, 08:17:47 PM
-
(https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrLf7XU9QCfMiGBSygSmxZrrtXEiL22gk2Fnm0L4g4aY8edJ0N)
ஓவியம் வேண்டுமென்கிறாய்
மீனொன்று வரைகிறேன்...
உயிருள்ள மீன் வேண்டுமென்றாய்....
உயிர் தருதலொன்றும்
சிரமமாயில்லை எனக்கு ...
தொட்டியொன்று வரைந்து
நீர் நிரப்புகிறேன்.
இப்போது
நீந்தச்சொல் என்று
உத்தரவிடுகிறாய் நீயெனக்கு....
சற்றே பொறுவென்று சொல்லிவிட்டு
சற்றருகில் வரைகிறேன்
கொக்கொன்றை....
உயிர் தரச்சொல்லும்
உத்தரவுக்காக கவனிக்கிறேன்...
எதிர்பார்ப்பை
வீணாக்கவில்லை நீ.....
வாசலில் வைக்கப்பட்ட கொக்கு
உயரெழும்பி பறக்கிறது.....
மீனெங்கேயென்ற உனது கேள்விக்கு
பதிலளிப்பது சுலபமாகிறது
எனக்கு ....
நீந்தத்துவங்கிய மீனை
கொக்கெடுத்துப்போனதாய்
நம்ப வைக்கிறேன்
நான் உன்னை ....
மெலிதாயொரு மெளனம் பரப்பிவிட்டு
அழத்துவங்குகிறாய்....
அம்மீனுக்காக....
கொக்கெனப் பறக்கிறேன்
நான் ....
சரி வா....
மீண்டுமொரு மீன் வரையலாம்.....!
-
அதி சுந்தர வரிகள் !!
அதுகாட்டிலும் வரிகளை காட்சிப்படுத்திய
விதம் அதனினும் அழகு !!
சிந்தனை சிறப்பு !!
-
வாசித்து வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி (https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRs1riXeHWfYD8hd0LIsNATZ4LZ_e5YEc7N02Qg4LNT3mEEXgrQ)
-
வார்த்தைத் திருகல் எதுவுமின்றி எளிமையான மொழியில் சம்பவங்களையும், காட்சிகளையும், நிகழ்வுகளையும் நேரடியாக விரித்துச் செல்லும் இக்கவிதையில் சூழல் பேசுவதைக் காண முடிகிறது. வாழ்த்துக்கள் நண்பா பிரபா...