FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 15, 2016, 08:07:44 PM
-
(https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/11866217_877637568957034_7663300127555174678_n.jpg?oh=60cc2b4c1c2aecbcc0d16677be9fc375&oe=574BC476)சிதறித்தொலைத்ததொரு
பெருந்தயக்கத்திற்க்குப்பிறகு
பேசிக்கொள்கிறோம்
நீயும் நானும்
உன்னைப்பிடிக்குமென்கிறேன்
உச்சந்தலையில்
பனி வைப்பதாய்
புன்னகைக்கிறாய்....
இதயம் சற்றே
இடறுகிறது
மெலிதே கொஞ்சம்
உளறுகிறது...
பொருள் நேசிக்கும் இதயம்
பொருள் தர யோசிக்கும்
அன்பு நேசிக்கும் இதயம்
என்றேனும்
அன்பு தர யோசிக்குமா....?
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F%5Bimg%5D%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%3Cbr+%2F%3E%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D&hash=c0f4954d4575aa63840d01f5e05f81bc6198eb1d)[/img]
அன்பே பொருளென்றேனும்
சொல்லி விடுகிறேன் .....
பொருளுக்கு பொருள் சொல்வது
சாத்தியமில்லை .....
உன்னை பிடிக்கும்
அவ்வளவே பொருள் ...
எவ்வளவு பிடிக்கும்
என்றேனும் கேள்...
அதற்கேனும் சொல்கிறேன்
நீயொரு கிழவியாய்
நானொரு கிழவனாய்
தோல் சுருங்கி
உடல் குறுகி
முடங்கிக்கிடக்கையில்
இன்று வினவும்
இக்கேள்விக்கு
உன்னை பிடிக்குமென்று
இன்றளிக்கும் பதிலையே
அன்றுமளிக்கும்
என் கனவை
விவரிக்கவேனும் முயற்சிக்கிறேன்....
சிதறித்தொலைத்ததொரு
பெருந்தயக்கத்திற்குப்பிறகு
பேசிக்கொண்டிருந்தோம்
நீயும் நானும் ....
உன்னைப்பிடிக்குமென்றேன்....
உச்சந்தலையில் பனியென்று
உச்சரித்து
உனக்குள் சிரித்தாய்....
எதுவும்
சொல்லாமல்
நகர்ந்தேன் நான் ....
உனக்கான அன்பையும்
எனக்கான சிரிப்பையும்
என்னோடு எடுத்துக் கொண்டு ....
உன்னைப்பிடிக்கும்
அவ்வளவே பொருள் .....!
-
வரி வரைந்த விதம் வசீகரம் !!
-
நன்றி