FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 14, 2016, 11:43:50 PM

Title: ~ புளிப் பொங்கல் ~
Post by: MysteRy on March 14, 2016, 11:43:50 PM
புளிப் பொங்கல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fp1010821-e1455347929200.jpg&hash=0d2e117a94926606206245f4fcb38cc1ee40cf8f)

தேவையானவை:

அரிசி – 250 கிராம்,
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் – 2,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
எண்ணெய் – 100 மில்லி,
கடுகு, கடலைப்பருப்பு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1 பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் எடுத்து, புளியை கரைத்துக் கொள்ளவும். அதில் அரிசியைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, 5 விசில் வந்ததும் இறக்கவும்.
சாதம் வெந்து நன்கு குழைந்து இருக்கும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, வெந்த சாதத்துடன் கலந்து நன்கு மசிக்கவும்.

குறிப்பு:

புளிப்பு, காரம் எல்லாம் சேர்ந்த இந்த புளிப் பொங்கலை, கருவுற்ற பெண்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.