FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 14, 2016, 11:34:13 PM

Title: ~ பச்சை மிளகாய் சட்னி ~
Post by: MysteRy on March 14, 2016, 11:34:13 PM
பச்சை மிளகாய் சட்னி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2F-%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D-%25E0%25AE%259A%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF-e1453817901929.jpg&hash=1e7eba91f0460d8c78c8c9932b61a7c02ec82ebc)

பச்சைமிளகாய் – 10
புளி – எலுமிச்சை அளவு
பெருங்காயம் – சிறிது
கடுகு-ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு,எண்ணைய் – தேவையானது
கறிவேப்பிலை – சிறிதளவு
வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன்(தேவைப்பட்டால் )
பச்சை மிளகாய் சட்னி

செய்முறை:

1.பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும். பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.சிறிது புலியையும் அதில் சேர்த்து கொள்ளவேண்டும் .
2.பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும். வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
3.வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம். தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.இப்பொழுது பச்சை மிளகாய் ரெடி