FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 14, 2016, 11:29:57 PM
-
ஹைதராபாத் வெஜ் பிரியாணி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2F1331294624806.jpg&hash=4bc6edc35ec40dc9f05b72ed91cec39d47ee6067)
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – ஒரு கப்
தயிர் – முக்கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு – அரை டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது)
கேரட், உருளைகிழங்கு – அரை கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
அரைக்க:
பச்சை மிளகாய் – மூன்று
சின்ன வெங்காயம் – ஐந்து
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
புதினா – ஒரு கைப்பிடி
முந்திரி – நான்கு
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
அனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கேரட், உருளைகிழங்கு போட்டு வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.
பாசுமதி அரிசி, தயிர், உப்பு, தண்ணீர் ஒன்றரை கப் ஊற்றி மூடி ஒரு விசில் வந்தவுடன் இறக்கி எலுமிச்சை பழ சாறு மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.