FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 14, 2016, 10:51:26 PM

Title: ~ பரோட்டா செண்ட்விச் ~
Post by: MysteRy on March 14, 2016, 10:51:26 PM
பரோட்டா செண்ட்விச்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fparotta-e1451977462138.jpg&hash=eb9dbec93c16995acfcdf6c7d4a9890bbbdf7ea1)

தேவை­யான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – ஒன்று (நான்கு பெரிய துண்டுகளாக நறுக்கியது)
வெ.பூண்டு – 2 பற்கள்
மிளகுத் தூள் – கால் டீஸ்­பூன்
சிக்கன் துண்­டு­கள் – 5
லெட்யூஸ் இலைகள் – கால் கட்டு (நறுக்கியது)
மயோனைஸ் – 2 டீஸ்­பூன்

செய்­மு­றை:

முதலில் பரோட்டாவை சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் சிக்கன் துண்­டு­க­ளை பொரித்து எடுத்து அதனை நீளமாக நறுக்கி வைக்கவும்.
அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், வெ.பூண்டை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பரோட்டாவின் ஒரு பாதியில் மயோனைஸை தடவி அதன் மேல் சிக்கன் துண்­டு­க­ளை பரப்பி மிளகுத் தூளை தூவி பொரித்த வெங்காயத்தையும் பரவலாக தூவி லெட்யூஸ் இலைகளை வைத்து பரோட்டாவை மறுபகுதியால் மூடி விடவும்.
சுலபமாக தயாரிக்கக் கூடிய சுவையான பரோட்டா செண்ட்விச் தயார்.