FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 13, 2016, 09:58:06 PM
-
நண்டு கட்லெட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fkaddu.jpg&hash=2b256b968f445960bdb72d4e5dca9f8c8b8e45ed)
நண்டு – அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
ப்ரெட் தூள் – ஒரு கப்
மைதா மாவு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
நண்டை வேக வைத்து உடைத்து சதையை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் நண்டு சதை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா தூள், மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியை சூடாக்கி அதில் இந்தக் கலவையைப் போட்டு வதக்கி, கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மைதா மாவில் சிறிது உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். வதக்கிய நண்டு கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும்.
தட்டி வைத்துள்ள நண்டு கலவையை, மைதா மாவு கரைசலில் நனைத்து, ப்ரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.
பிறகு அவற்றைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
சூடான நண்டு கட்லெட் ரெடி. சில்லி சாஸுடன் பரிமாறவும்.