FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on July 17, 2011, 10:08:18 PM

Title: மரணம்!!!
Post by: Yousuf on July 17, 2011, 10:08:18 PM
அது இல்லாது போனால்
என்னவாகும் உலகம்
ஜனனமே தொடர்ந்தால்
பூமியே மூச்சிமுட்டிப்போகும்

மரணம்
பிறப்பிற்கான சான்றிதழ்
பாவபாதையின் தடைக்கல்

மரணம்
இவ்வுலக வாழ்வின் சம்பளம்
மறுவுலக வாழ்வின் முன்பணம்

மரணம்
விதவையின் விரோதி
வெள்ளைச்சேலையின் நண்பன்

மரணம்
நல்லவைகளால் மணம் கமழும்
தீயவைகளால் மனம் உருகும்

 மரணம்
தேடிப்போவது “ரணம்”
தேடிவருவது சுகம்

மரணம்
அடைந்தபோது உடலாகும் “மரம்”
அதை காணும்போது
அச்சத்தால் உள்ளம் அஞ்சிநடுங்கும்

மரணம்
அடைந்தவருக்கு கிடைத்திடும்
சாந்தி
வாரிகொடுத்தவருக்கு தொலையும்
மனநிம்மதி

மரணம்
நான்குவகை பரிமாணம்
[ஜனனம் இன்பம் துன்பம் மரணம்]
நான்கு தோள்களின் பயணம்
[இறுதி ஊர்வலம்]

மரணம்
உலகுக்கு திரும்பமுடியாத
ஒற்றையடிபாதை
இதை உணர்ந்தால் தெளிந்திடும்
உலகபோதை

மரணம்
நான்கெழுத்தின் கவிதை
விவரிக்கமுடியாத சரிதை
மனம் கசிந்துருகும் அழுகை

மரணம்
வருமுன் காப்போம் மனதை
தவிர்த்துக்கொள்வோம் தீயதை
தொடர்ந்து செய்வோம் நல்லதை……..


மணம், ரணம், மரம், மரணம்!!
Title: Re: மரணம்!!!
Post by: Global Angel on July 17, 2011, 10:25:09 PM
:'( :'( :'( :'( :'( :'( bayamma erukkkuuuuuu... mommeeeee  :'( :'( :'( :'(
Title: Re: மரணம்!!!
Post by: Yousuf on July 17, 2011, 10:42:43 PM
Neengal Maranathirrku anji irummbu koattaikalil irunthaalum sariye maranam ungalai adainthey theerum...!!!

So maranam varum mun nanmaikalai athikam seivom...!!! :) :) :)
Title: Re: மரணம்!!!
Post by: குழலி on July 18, 2011, 03:56:48 PM
:o maranam :|