ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 093
இந்த களத்தின்இந்த நிழல் படம் Pavithraஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F093.jpg&hash=2fa27b12b3e976e5a657358797d1a7600227426b)
தன்னலமற்ற இரு உள்ளங்கள்
பல வேறுபாடுகளைக் கடந்து
ஒன்றிணைவதே புனிதமான
நட்பு !!
ஆண் பெண், ஏழை பணக்காரன்
என்றெல்லாம் பாகுபாடின்றி
கைகோற்பதே தெய்வீகமான
நட்பு !!
கோபம் வஞ்சகம்
என்பதையெல்லாம் சிந்திக்காமல்
உடைத்தொழிப்பதே உண்மையான
நட்பு !!
தோழன் அவன் வாடினால்
தோழி இவள் அவனுக்காக
கலங்குவதே ஆழமான
நட்பு !!
சிலருக்கு இது மூன்றெழுத்து சொல்
அனால்.. பலருக்கு நண்பன் எனும்
உறவு தரும் சொல்
நட்பு !!
நட்பால் இணைந்திருப்போம்..
துயரத்தை மறந்திருப்போம்..
நண்பனுக்கு தோள் கொடுப்போம்..
நட்பிற்கு உயிர் கொடுப்போம்..
நண்பேண்டா !!
~ மைனா தமிழ் பிரியை ~
ஆண் பெண்ணின்
திருமனத்திற்கு வயது
வரம்பு உண்டு
ஆனால் நட்புக்கு வயது
வரம்பு கிடையாது ...
கடவுளுகே நம் மேல்
பொறாமை போல
ஆதலால் தான்
காலதாமதமாக நம்மை
சந்திக்க வைத்துள்ளார் ....
கண்டதும் கூட
காதல் வந்துவிடுகிறது
நட்பு மட்டும் ஏனோ இதயம்
தொட்டால் மட்டுமே வருகிறது ...
அரட்டை அரங்கத்திலுள்
நுழைந்து உன் பெயர் கண்டதும்
எனக்குள் இருக்கும் அந்நியன் சத்தமின்றி
வெளியேறி அம்பி ஆகிவிடுகிறேன்...
என் தவறை பிறர் பின்னால்
புறம் பேசும் முன்
என்னிடம் தயங்காமல்
கூறுபவன் என் நண்பன் ....
எனது அறிவை வளர்த்துக்
கொள்ள நல்ல புத்தகம்
தேவை இல்லையடா
உன் நட்பு ஒன்றே போதும்...
தானாக கலங்கிய
கண்ணிற்கும் தூசியால்
கலங்கிய கண்ணிற்கும்
வித்தியாசம் என் நண்பன்
மட்டுமே அறிவான்...
அடுத்த நிமிடம்
நமக்கு சொந்தமில்லை
அதற்குள் ஏன் இந்த கோபம்,வெறுப்பு
என்று என்னுள் இருந்த
குப்பைகளை அகற்றியவன் ...
நீதிபதிக்கு வேண்டியது
எல்லாம் சாட்சி மட்டும்
தான் உண்மை அல்ல
எனக்கு வேண்டியது எல்லாம்
உன் நட்பு மட்டும் தான்
உறவுகள் அல்ல ...
அன்பு செய்ய நீ இருக்கிறாய்
வேறு என்ன வேண்டும்
தாயின் கைகளுக்குள்
அடங்கும் குழந்தை ஆனேன் ...
நட்பு என்னும் கரம் கோர்த்து
சீரான ரயில் தண்டவாளம் போல
இணைந்தே செல்லும் இணையில்லாத
நட்பு பயணத்தை தொடருவோம் .. ...