FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 12, 2016, 09:11:35 PM
-
7 நாட்கள் ஜூஸ் உணவுமுறை கொண்ட திட்டம்,எடை இழக்க,எடை குறைவதற்கு
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12472537_1544955905801879_8223161839554732750_n.jpg?oh=907766f40d8ae0f843eacb4137bbee0c&oe=5791EC6F&__gda__=1469498192_ddc14ec49039a5ae460f46c2e1dd26eb)
இன்று மக்கள் எடையை குறைப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளனர். இதற்கு அவர்கள் எல்லா முயற்சியையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்! மேலும் இதற்காக பல உணவு திட்டங்களை தேர்வு செய்கின்றனர். அனைத்து உணவுமுறையிலும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது என உறுதியளிக்கிறார்கள். இவ்வாறான, உணவுமுறைகள் மனித உடலில் திரட்டப்பட்ட நச்சுகள் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். சில உணவு திட்டம் ஒரு வாரம் அல்லது தொடர்ந்து சில மாதங்களுக்கு பட்டினி கிடக்கும் படி செய்யும். 7 நாள் ஜூஸ் உணவு திட்டம் ஒரு ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு ஒரு விரைவான ஆரோக்கியத்தை தரும்.
7 நாள் ஜூஸ் உணவுமுறையின் அடிப்படைகள்:
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமா, இதோ கீழே படிக்கவும்:.
எளிய வகை உணவுமுறைகள்:.
ஒரு வாரம் திரவ அடிப்படையிலான பழச்சாறுகள் உட்கொண்ட பிறகு, நீங்கள் வழக்கமான உணவுமுறையை பின்பற்றலாம். நீங்கள் இந்த உணவு முறையை பின்பற்றும் போது, நீங்கள் காய்கறிகள், செலரி, மற்றும் ஆப்பிளால் செய்யப்பட்ட சாறுகளை குடிக்க வேண்டும். நீங்கள் தினமும் இரண்டு சிற்றுன்டி, இரண்டு மதிய உணவு மற்றும் இரண்டு வேளை இரவு உணவு எடுத்துக்கொள்ளளாம். இந்த உணவுமுறை பற்றிய விஷயத்தை நன்றாக அறிந்த்தால் நீங்கள் சில மாற்றங்களை செய்ய முடியும். இந்த உணவுமுறை நல்ல படியாக வேலை செய்ய வேண்டுமென்றால், பதப்படுத்தப்பட்ட செயற்கை இனிப்பு மற்றும் சுவையூட்டக்கூடிய உணவை தவிர்த்து இயற்கை மூலிகைகள் நிறைந்த உணவுகளை பயன்படுத்தலாம்..
நீங்கள் உங்கள் ருசிக்கு ஏற்ப பொருத்தமாக பிடித்த பழம் அல்லது காய்கறியை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக உங்களுக்கு கீரை பிடிக்காதென்றால் அதை விடுத்து மற்றொரு காய்கறியை அதற்கு பதிலாக பயன்படுத்தலாம்.
வெறும் திரவங்கள் மட்டும் உபயோகிக்கவும்:
நீங்கள் இந்த 7 நாட்கள் எந்த திட உணவும் சாப்பிடக்கூடாது. வெறும் சாறு மட்டும் குடிப்பது கடினமாகத்தான் இருக்கும், ஆனால் இந்த உணவு முறையில் ஒரு அடிப்படை விதி உள்ளது. உங்களுக்கு பசித்தால், தினசரி ஒதுக்கீட்டில் கூடுதலாக ஒரு கப் பழச்சாறு குடிக்கலாம். திட உணவு மட்டும் கட்டாயம் உட்கொள்ளக்கூடாது என்பதால், நீங்கள் பழங்களுடன் சிறிது சயிரை சேர்த்து ஸ்மூத்தீஸ் போல பயன்படுத்தலாம். .
– நீங்கள் பழச் சாறு குடித்த பின்பு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்..
– ஒவ்வொரு நாளும் எலுமிச்சை சாற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து குடிப்பதன் மூலம், உங்கள் செரிமான அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது…
நிறைய ஜூஸ் குடிக்க வேண்டும்:.
இந்த ஜூஸ் சார்ந்த உணவு திட்டத்தின் போது, நீங்கள் 4-6 க்ளாஸ் சாறுகள் ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டும். நீங்கள் பருவகால மற்றத்திற்கு ஏற்றார் போல் பழ வகைகளை மாற்றலாம், மேலும் சிட்ரஸ் பழச் சாறுகளையும் தயார் செய்யலாம். இதில் பழங்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது. நீங்கள் வழக்கமாக சாப்பிடும் பழங்களையும் வைத்துஇதே போல் முயற்சிக்கலாம்..
7 நாள் ஜூஸ் உணவுமுறை திட்டத்தின் நன்மைகள்:.
நீங்கள் ஒவ்வொரு நாளும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாறை குடிக்கும் போது அது உடல் நலனை மட்டுமல்லாது நிறைய சத்துக்களையும் கொடுக்கின்றது. நீங்கள் சாதாரணமாக ஒரு நாளில் 7-8 ஆரஞ்சு சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் ஆரஞ்சு சாற்றை ஒரு பெரிய கண்ணாடி டம்பிளரில் குடிக்கலாம், அது 8 ஆரஞ்சுக்கு சமமான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இதனால் உங்களுக்கு இயற்கையான முறையில் நல்ல உடல் பலத்தை பெறலாம்.
நீங்கள் ஒரு வாரம் இந்த உணவுமுறையை பின்பற்றினால் உங்கள் உடல் மற்றும் மனதில் புதிய மாற்றத்தை நிச்சயம் உணர்வீர்கள். மேலும் அனைத்து திரவ உணவுமுறைகளும் உடலின் டீ-டாக்ஸிஃபிகேஷனுக்கு பெரிதும் உதவுகிறது.
ஜூஸ் உணவுமுறையினால் ஏற்படும் பக்க விளைவுகள்:.
இந்த உணவுமுறையில் பொதுவான மற்றும் லேசான பக்க விளைவுகள் உள்ளன. அவை தலைவலி, உடல் வலி மற்றும் மயக்கமுறுதல் ஆகியவையாகும்..
ஜூஸ் உணவுமுறையின் கடுமையான பக்கவிளைவுகள்:.
இந்த உணவு முறையினால் முறையற்ற இதய துடிப்பு, குறைவான இரத்த அழுத்தம் போன்ற தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. மேலும் நீங்கள் விரதம் இருக்கும் போதும் இதே மாதிரி ஏற்படுகின்றது.
7 நாள் ஜூஸ் உணவுமுறைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:.
இந்த உணவு திட்டம் பருமனான உடல் அமைப்பை உடையவர்களுக்கு ஏற்றது. சிலர் பல்வேறு காரணங்களுக்காக இந்த உணவு முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் எப்போது இந்த உணவுமுறை முயற்சியை பின்பற்றக்கூடாது என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:.
– நீங்கள் கர்ப்பமாக இருக்கு போது..
– நீங்கள் நீரிழிவு நோயால் அவதியுறும் போது..
– நீங்கள், மருந்துகள் சாப்பிடும் போது திட உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்..
இந்த உணவு முயற்சியால் நீங்கள் ஆரம்பத்தில் பசி மற்றும் பலவீனமாக உணர்ந்தாலும், நீங்கள் விரைவில் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராவீர்கள். நீங்கள் கூடுதல் பவுண்டுகளை இழக்க இது மிகவும் சாத்தியமாகும், மேலும் இயற்கை வழியில் உங்கள் உடல் சுத்திகரிக்கப்படுகிறது!.
வாரம் முழுவது நீங்கள் இந்த சாறு உணவுமுறையை உபயோகிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதோடு, உங்கள் உடல் உறுப்புகளும் சுத்தமாகிறது. எனினும், உங்கள் உடல் இந்த காலத்தில் வித்தியாசமாக இருக்கலாம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த உணவில் ஒரு சில பக்க விளைவுகள் தவிர வேறு எந்த பிரச்சினைகளும் இல்லை. மேலும், இந்த பக்க விளைவுகள் எதுவும் மருத்துவ தலையீட்டை ஏற்படுத்தாத அளவிற்கு நல்ல விஷயமாகும். நீங்கள் மீண்டும் சாதாரணமாக சாப்பிட ஆரம்பிக்கும் போது இந்த விளைவுகள் மறைந்துவிடும்.
என்ன பழச்சாறு உணவு சாத்தியமில்லாதது போல தோன்றுகிறதா என்ன? நீங்கள் இதை ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன். கீழே உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்