FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 11, 2016, 11:38:03 PM

Title: ~ கோதுமை அப்பம் ~
Post by: MysteRy on March 11, 2016, 11:38:03 PM
கோதுமை அப்பம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Ffrd.jpg&hash=8c701082f766f26dfaf9e914f1d4b26f5c334b5a)

கோதுமை மாவு – கால் கிலோ
அரிசி மாவு – 100 கிராம்
வெல்லம் – 150 கிராம்
எண்ணெய் அல்லது நெய் – கால் லிட்டர்
ஏலக்காய் – 4

கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தனித்தனியே சலித்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் வெல்லத்தை போட்டு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் அரிசி மாவு, ஏலக்காய் பொடி சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஊற்றிய உடனே உப்பி வரும்.
பிறகு திருப்பி போட்டு சற்று பொன்னிறமாக வரும் வரை வேகவிடவும்.
இருபுறமும் சிவக்க வெந்ததும் கரண்டியால் எண்ணெய்யை வடித்து பிறகு எடுக்கவும்.
இது சற்று எண்ணெய் குடிக்கும் பதார்த்தம். எண்ணெய் பதார்த்தம் ஒத்துக் கொள்ளாதவர்கள் இதே மாவை வைத்து பணியாரம் செய்யலாம்.
பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து அதில் நெய் தடவி, மாவை கரண்டியில் எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றி வேகவிடவும்.
ஒருபுறம் சிவக்க வெந்ததும் திருப்பி போட்டு வேக எடுக்கவும்.
இருபுறமும் பொன்னிறமாக சிவந்து வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.