FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 11, 2016, 10:29:42 PM
-
காய்கறி சூப்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fsuo.jpg&hash=f0a711c9209e23a02f3e1b0fca2010b04ec62b2a)
காய்கறிகள் – ஒரு கப்(கேரட், பீன்ஸ், க்ரின்பீஸ், கார்ன்)
பூண்டு – ஒரு துண்டு
இஞ்சி – ஒரு துண்டு
பெப்பர் பவுடர் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
வெண்ணெய் – 1/2 தேக்கரண்டி
கார்ன் ஸ்டார்ச் – 1/4 தேக்கரண்டி
பால் – 1/4 கப்
இஞ்சியை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவைகள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் இஞ்சி, பூண்டு மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய காய்கறிகளுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் தண்ணீர் அல்லது பாலில் கார்ன் ஸ்டார்சை பேஸ்ட் போல் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பானில் பாலை எடுத்துக் கொண்டு அதில் கரைத்து வைத்திருக்கும் கார்ன் ஸ்டார்ச் மற்றும் வேக வைத்த காய்களையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
சூப் சற்று கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பரிமாறும் போது சூப் பெளலில் ஊற்றி பெப்பர் பவுடர், புதினா இலைகள், ரோஸ்டட் ப்ரெட் க்யூப்ஸ் இருந்தால் அதையும் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.