FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 11, 2016, 10:12:18 PM
-
கேரட் புட்டு & கேரட் சம்பல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fhh.jpg&hash=91f3cd487641fa5889b4430f20543feab516c23b)
கேரட் புட்டு:
வறுத்த சிவப்பரிசிமாவு – 2 கப்
கேரட் துருவல் – 3/4 கப்
நறுக்கிய கோவா(முட்டைகோஸ்) – 1/4 கப்
தேங்காய்துருவல் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கேரட் சம்பல்:
கேரட் – ஒன்று (மீடியம்)
பச்சை மிளகாய் – 3 (காரத்திற்கேற்ப)
நறுக்கிய வெங்காயம் – 3 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் – 1 அல்லது 1 1/2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – பாதி பழத்திலிருந்து
உப்பு – தேவையான அளவு
கேரட் துருவல் மற்றும் முட்டைகோஸை சேர்த்து அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசிமாவை போட்டு சிறிது உப்பு போட்டு கலந்து சுடுத் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும். மாவு கையால் பிடித்தால் உதிராமல் நிற்கக் கூடிய பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
பின்னர் அதை ஒரு பெரிய தட்டில் கொட்டி ஒரு சிறிய டம்ளரினால் கொத்தி விடவும்.
அதன் பிறகு இந்த மாவுடன் தேங்காய் துருவல், கேரட் கலவையை சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுத்து ஆற விடவும்.
சுவையான கேரட் புட்டு தயார். இதை கறி, குழம்பு, சம்பல், சாம்பார் போன்ற அனைத்து பக்க உணவுகளுடனும் சாப்பிடலாம். அரிசி மாவிற்கு பதில் ராகி மாவிலும்(குரக்கன் மா) செய்யலாம்.
கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் புட் ப்ரோஸசரில் அனைத்து பொருட்களையும் போட்டு 3 – 4 சுற்று ஓட விட்டு எடுக்கவும்.
சுவையான கேரட் சம்பல் தயார். புட் ப்ராஸசர் இல்லாவிட்டால் கேரட்டை துருவிக் கொண்டு வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். எலுமிச்சை சாறு, தேங்காய் துருவல் சேர்ப்பதால் அதிக நேரம் வெளியில் வைத்திருந்தால் புளித்து விடும். எனவே உடனே சாப்பிடலாம் அல்லது ப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம்.
இந்த கேரட் சம்பலை சாதத்துடன் பக்க உணவாக சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.