FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 11, 2016, 01:47:25 PM

Title: ~ மிளகு சால்னா ~
Post by: MysteRy on March 11, 2016, 01:47:25 PM
மிளகு சால்னா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fvbg.jpg&hash=646c4fdbe6e0639802e0338a234747d4f6c9a552)

புளி – ஒரு எலுமிச்சை அளவு
மிளகு – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 8 இலை
கடுகு – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பையும், மிளகையும் போடவும்.
உளுந்து லேசாக சிவந்து மிளகு வெடிக்க ஆரம்பிக்கும் போது பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் போட்டு லேசாக வறுத்து, புளியை அப்படியே அதில் போட்டு கறிவேப்பிலையும் போட்டு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் 2 டம்ளர் தண்ணீர் இத்துடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக கொதித்து வரும்போது இறக்கவும்.
இதை சூடான சோற்றில் ஊற்றி, சிறிது நெய்விட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.