FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 11, 2016, 11:31:52 AM

Title: ~ உடலுக்கு தெம்பு தரும் நண்டு சூப் ~
Post by: MysteRy on March 11, 2016, 11:31:52 AM
உடலுக்கு தெம்பு தரும் நண்டு சூப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2F-%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25A8%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581-%25E0%25AE%259A%25E0%25AF%2582%25E0%25AE%25AA%25E0%25AF%258D-e1457016610657.jpg&hash=14aeab2cecb3e79e2dcb3046e9692bd11676e923)

தேவையான பொருட்கள்

நண்டு 200 கிராம்
மீன் 200 கிராம்
இறால் 200 கிராம்
கேரட் 4
வெங்காயம் 4
மிளகு 12
எண்ணெய் 1 குழிக் கரண்டி
உப்பு தேவையான அளவு.

செய்முறை

* முதலில் வெங்காயம், கேரட் இரண்டையும் சிறிதுசிறிதாக வெட்டிக்கொள்ளவேண்டும்.
*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும்.
* அதனுடன் நண்டு, மீன், இறால், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
* தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
* காய்கறி மற்றும் நண்டு, மீன், இறால் வகைகள் நன்கு வெந்தவுடன் இறக்கி விடவும்.
* இப்பொழுது நண்டு, மீன், இறால் இவைகளை வெளியே எடுத்து சூப்பை பரிமாறவும்.
* சூப்பில் ஒரு துண்டு நண்டு, மீன், இறால் வருமாறு பரிமாறலாம்