FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 11, 2016, 08:41:38 AM
-
அயர்ந்த உறக்கத்தில் இருக்கும் போது
ஆதாமின் விலாஎலும்பில் இருந்து
படைக்கப்பட்டவள் பெண்
பைபள் சொல்லும் வார்த்தையிது
வெறும் சதையாக ஆணுக்கு
உருவம் படைக்கும் எலும்பாக இருப்பவளும்
பெண்ணே
களைத்த உடலுக்கு உறக்கம் போல
ஆணுக்கு ஓய்வையும் புத்துணர்ச்சியையும்
தருபவள் பெண்
உறக்கத்தில் தோன்றுவது
கனவு
ஆணின் கனவாக இருப்பவளும்
பெண்ணே
எலும்புகள் உடலுக்கு
உறுதியைத் தருகின்றன
ஆணுக்கு உறுதியாக இருப்பவள்
பெண்ணே
ஆண் கரடு முரடான
கல்
அந்தக் கல்லிலிருந்து
வடித்தெடுத்த சிற்பம்
பெண்
படைப்பின் சாரம்
ஆண்
ஆணின் சாரம்
பெண்
பரிமாண மரத்தின் கிளைகள்
ஆண் - அதில்
சுவை தரும் கனிகள்
பெண்
-
பெண் அகிலத்தின் சக்தி என்பதை அழகான கவிதையாய் வடித்த
உங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.