FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 10, 2016, 10:10:57 PM

Title: ~ அத்திப்பழ லட்டு ~
Post by: MysteRy on March 10, 2016, 10:10:57 PM
அத்திப்பழ லட்டு

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12794411_1544610822503054_5955401947450964138_n.jpg?oh=4dd439cee869232c98694e07e9d40525&oe=5752C9C7)

தேவையான பொருட்கள் :

உலர்ந்த அத்திப்பழம் – 300 கிராம்
பேரீச்சம்பழம் – 100 கிராம்
உலர்ந்த திராட்சை – 50 கிராம்
வெள்ளை எள் – 50 கிராம்
முற்றிய தேங்காய் துருவல் – அரை கப்
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை:

* அத்திப்பழம், பேரீச்சம்பழம் திராட்டையை மிக்சியில் போட்டு அரையுங்கள்.
* எள், பெருஞ்சீரகம் வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
* வாணலியில் தேங்காய் துருவலை போட்டு சிறு தீயில் வறுத்தெடுக்கவும்.
* அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் கொட்டி சிறிய எலுமிச்சை பழ அளவில் உருட்டி சுவையுங்கள்.
* இது கர்ப்பிணிகள், பருவடைந்த பெண்கள், குழந்தைகளுக்கு நிறைந்த ஊட்டச்சத்தை தரும்.
* ஒரு வாரத்திற்கு மேல் இந்த லட்டுகளை வைத்திருக்க கூடாது.