FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 10, 2016, 09:41:33 PM

Title: ~ நோய்களையும் தீர்க்கும் சோற்றுக்கற்றாழை
Post by: MysteRy on March 10, 2016, 09:41:33 PM
நோய்களையும் தீர்க்கும் சோற்றுக்கற்றாழை

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/12804797_1544623342501802_8392059321530286032_n.jpg?oh=304b448622172157e52c13bc951c2ebb&oe=57563509)

சோற்றுக்கற்றாழையுடன் வெள்ளைப் பூண்டு, பனங்கற்கண்டு, எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து காய்ச்சி வடித்து பருகினால் வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் குட்பை. மாதவிடாய் கோளாறுகள், நீர் கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கற்றாழையில் உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிட்டால் அந்த பிரச்னைகள் பறந்துப் போகும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.

தீக்காயங்களுக்கு உடனடி டாக்டராக சோற்றுக்கற்றாழை செயல்படும். அரிப்புகளுக்கு அருமருந்தாக உள்ளது என்று சோற்றுக்கற்றாழையின் மருத்துவ குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதை பயன்படுத்தும் போது 7 முறை தண்ணீரில் கழுவ வேண்டும். ஏனெனில் அலோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கழுவாமல் சாப்பிடும் போது நிச்சயம் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக்கற்றாழை பெரிதும் உதவுகிறது. அதன் வேர்களை சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இட்லி குக்கரில் (பானையில்) பால் விட்டு அதன் ஆவியில் வேர்களை வேக வைத்து நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு அதை பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு பாருங்கள்.

தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்து சோற்றுக்கற்றாழை என்று சொல்வீர்கள். இதை இறைவன் அருளிய இயற்கை வயகாரா என்று சொல்லாம். சோற்றுக்கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை என பலவகைகள் உள்ளன'' என்று கற்றாழையின் புராணத்தை கூறினார்.